மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க
முடியாத சக்தியாக விளங்குபவர் மமதா பானர்ஜி. அங்கு அவருடன் கூட்டணி சேர்ந்தால்தான்
மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் வெற்றி பெறமுடியும். மமதா பானர்ஜியின் ஆட்சியை
அகற்றுவதற்காக காங்கிரஸும்
பாரதீய ஜனதாக் கட்சியும் தனித்தனியாக களம் இறங்கி உள்ளன. மேற்கு வங்க சட்ட சபைத் தேர்தல்
ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி
முதல் மே மாதம் 5 ஆம் திகதிவரை ஆறு கட்டங்களாக
நடைபெற உள்ளது. தமிழ் நாடு, புதுவை,அசாம், கேரளா,மேற்கு வங்கம் ஆகிய ஐந்து சட்ட சட்ட சபைகளுக்கான
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணி பேரம் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தைகளை பிரதான
கட்சிகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. தேர்தல் திகதி பற்றிய அறிவிப்பு வெளியான
இரண்டு மணி நேரத்தில் மமதா தனது கட்சியில்
போட்டியிடும் வேட்பாளர்
பட்டியலை வெளியிட்டர்.
மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 34 ஆண்டுகள்
ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசை 2011 ஆம் ஆண்டு
மமதாவின் தலைமையிலான திரிணாமூல்
காங்கிரஸ் வீட்டுக்கு
அனுப்பியது. மேற்கு வங்கத்தில அசைக்க முடியாத சக்தியாக இருந்த
இடதுசாரிகளை அசைத்ததில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு. மமதாவுடன் கூட்டுச்சேர்ந்த காங்கிரஸ் இடதுசாரிகளை ஆட்சியில்
இருந்து அகற்றியது. . 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற
தேர்தல்களில் போட்டியிட்ட மமதாவின் கட்சி படுதோல்வியடைந்தது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தலில் ஒரே
ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தனித் தனியே நின்றால் வெற்றி பெற முடியாது
என்ற உண்மையை காலம் கடந்து உணர்ந்த மமதா, காங்கிரஸுடன்இணைந்து போட்டியிட்டார்.
தனது பரம எதிரியான இடதுசாரிகள் தோல்வியடைய வேண்டும்
என்பதற்காக இன்னொரு
எதிரியான மமதாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.
காங்கிரஸின் புண்ணியத்தால் 2011 ஆம் ஆண்டு
நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் பெரும் பான்மை பலத்துடன் மமதா முதலமைச்சரானர்.
முதலமைச்சர் கதிரையில்
அமர்ந்ததும், காங்கிரஸை ஓரம் கட்டினர் மமதா. 2011 ஆம் ஆண்டு
மமதாவை முதலமைச்சராக்கிய
காங்கிரஸ் இப்போது அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முயற்சி செய்கிறது. 2011
ஆம் ஆண்டு இடதுசாரிகளை வெளியேற்றுவதற்கு மாமதாவுடன் கைகோர்த்த காங்கிரஸ், இப்போது இடதுசாரிகளுடன்
கைகோர்த்து மாமதாவை ஆட்சியில்
இருந்து அகற்ற திட்டம்
போடுகிறது. 2014
ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒரு பொருட்டாக மமதா
மதிக்கவில்லை. தனக்கு
தேவை ஏற்படும் போது கூட்டணி அமைப்பதும் தேவை முடிந்ததும் காங்கிரஸை
கழற்றி விடுவதும் மாமதாவின் கொள்கையாக
இருந்தது. மாமதாவுக்கு
பாடம் புகட்டுவதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்த
காங்கிரஸுக்கு தேர்தல் என்ற ரூபத்தில் நல்ல நேரம் கூடி வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் மாமதாவின் திரிணாமூல் 156 தொகுதிகளில்
வெற்றி பெற்றது. மாமதாவின்
தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கய விவகாரம் அக் கட்சிக்கு பின்னடைவை
ஏற்படுத்தி உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் இலஞ்ச விவகாரம் சூடு
பிடித்தது.
மேற்கு வங்கத் தேர்தலில் மாமதாவின்
கட்சி தனித்துப் போட்டியிடுகிறரது.. கடந்த ஐந்து
வருட ஆட்சியில் மக்கள் பல நன்மைகளைப் பெற்றுள்ளார்கள். மக்கள்
அனைவரும் தனது பக்கம் நிற்கிறார்கள் என்ற அதீத நம்பிக்கை மாமாதாவிடம் இருக்கிறது.
மேற்கு வங்கத் தேர்தலில் மமதாவை
வீழ்த்தும் அதே வேளை பாரதீய ஜனதாக் கட்சியையும் ஓரம் கட்ட வேண்டிய தேவை காங்கிரஸுக்கு உள்ளது.
இடதுசாரிகள், பாரதீய ஜனதாக் கட்சி, மமதா, காங்கிரஸ் கட்சி என நன்கு முனைப்
போட்டி நடைபெற்றால் காங்கிரஸின் தோல்வியைத் தவிர்க்க முடியாது. இடதுசாரிகளும்
மமதாவும் கடும் போட்டியைக்
கொடுப்பர்கள் பாரதீய ஜனதாவை விட குறைவான வாக்குகளைப்
பெற்றால் அது நாடளாவிய ரீதியில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்தப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான வழியை காங்கிரஸ்
தேடிக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பலமான இடதுசாரிகளுடன் இணைந்தால்
வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நம்புகிறது. மேற்கு வங்கத்தில் மமதா ஆட்சியைத் தக்கவைப்பார் என்ற நம்பிக்கை பலருடன்
உள்ளது. இடது சாரிகளும் காங்கிரஸும் இணைந்தால்
மாமதாவின் வெற்றி கேள்விக்குறியாகி விடும்.
ரமணி
தமிழ்த்தந்தி
20/03/16
No comments:
Post a Comment