ராஜஸ்தான்
ரோயல் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற எட்டாவது
ஐபிஎல் போட்டியில் 201 ஓட்டங்கள் அடித்து ஐந்து விக்கெற் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ்
ஹைதராபாத் வெற்ரி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி
பெற்ற ராஜஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடீரண்டு விக்கெற்களை மட்டும் இழந்து
198 ஓட்டங்கள் எடுத்தது. 199 ஓட்ட வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய
ஹைதராபாத் ஐந்து விக்கெற்களை இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது.
சன்
ரைசர்ஸ் அணி
கப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில்
இருந்து குணமடைந்து
அணியுடன் இணைந்தார். ரகானே, ஜோஸ் படலர் ஜோடி களமிறங்கியது. 3.5 ஓவரில் ரஷீட்கனின் பந்தில் விக்கெற்றை
இழந்த ஜோஸ் பட்லர் ஐந்து ஒட்டங்களுடன் வெளியேறினார்.
பட்லர்
ஏமாற்றினாலும், ரகானே, சஞ்சு சாம்சன் ஜோடி எதிரணியை அச்சுறுத்தியது. இந்த ஜோடி. முதல் 50 ஓட்டங்களை
8வது ஓவரிலும்,
100 ஓட்டங்களை 12வது ஓவரிலும் எட்டினர்.
இருவரும்
அரை சதம்
கடந்தனர். இருவரும்
2 ஆவது விக்கெற்றுக்கு
119 ஓட்டங்கள் சேர்த்தபோது நதீமின் பந்தை மணிஸ் பாண்டேயிடம் பிடி கொடுத்து 70 ஓட்டங்களில்
ரஹானே ஆட்டமிழந்தார். சஞ்சு சம்சனுடன் பென் ஸ்டோக் இணைந்தார். இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்தது.
55 பந்துகளுக்கு முகம் கொடுத்த சஞ்சு சாம்சன் 10 பவுண்டரி நான்கு சிக்ஸருடன் 102 ஓட்டங்கள்
எடுத்தார். ஒன்பது பந்துகளைச் சந்தித்த பென் ஸ்டோக் 16 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 190 ஓட்டங்கள் எடுத்தது.
199
ஓட்டம் எனும் கடின இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சன் ரைசர்ஸ் ஐந்து விக்கெற்களை இழந்து
201 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெற்களால்
வெற்றி பெற்றது. டேவிட் வானர்,பிரிஸ்ரோவ் ஜோடி அதிரடியாகத்ட் துடுப்பெடுத்தாடி வலுவாக அடித்தளமிட்டது கேன் வில்லியம்ஸன்,விஜய்
சங்கர்,யூசுப்பதான் ரஷீட் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற உதவினர்.
9.4 ஓவரில் 110 ஓட்டங்கள் எடுத்தபோது வானர் ஆட்டமிழந்தார். 37 பந்துகளுக்கு முகம் கொடுத்த
வானர் ஒன்பது பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 69 ஓட்டங்கள் அடித்தார்.
பிரிஸ்டோவ்
45, கேன் வில்லியம்சன் 14,விஜய் சங்கர் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மணிஸ் பாண்டே
ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 15 பந்துகலில்
விஜய் சங்கர் அடித்த 35 ஓட்டங்களால் ஹைதராபாத் வெற்றியை நெருங்கியது. யூசுப் பதான்,ரஷீட்
கான் அகியோர் ஆட்டமிழக்காது முறையே 26 15 ஓட்டங்கள் எடுத்தனர்.
தோல்வியை
வெற்றியாக்கிய ஹைதராபாத் இந்த சீசனில் வெற்றி இலக்கை விரட்டி 200 ஓட்டங்கள் அடித்து சாதனை செய்தது.
No comments:
Post a Comment