Monday, June 3, 2019


உலகக்கிண்ண சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரிஸ்டல் கவுண்டியில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்ரி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலிஒல் துடுப்பெடுத்தாடி 38.2 ஓவர்களில் சகல விக்கெற்கலையும் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்தது. 34.5 ஓவர்களில் மூன்ரு விக்கெற்களை இழந்த அவுஸ்திரேலியா 209 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான முதமது ஷஸாத், ஹஸ்சரத்துல்லா ஸஸாய் ஆகிய இருவரும் ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தனர். ஹஸ்மத்துல்லா ஷாஹிதி18, முஹமது நபி 7 ஆட்டங்களில் ஆட்டமிழந்தனர். நம்பிக்கையுடன் விளையாடிய ரஹ்மத் ஷா  43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். குல்பதீன் நபி, நஜிபுல்லா சட்ரன் ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடியது. நஜிபுல்லா 51, குல்பதீன் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.   ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெற்களை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தபோது கலத்தில் நின்ற ரஷீட் கான் அதிரடியாக 11 பந்துகளில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர் அடங்கலாக 27 ஓட்டங்கள் எடுத்தார். மஜிப் உர் ரஹ்மான் ஒன்பது பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்தார்  மத்திய வரிசை வீரர்கள் கைகொடுத்ததால் ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்களைக் கடந்தது.

ஆப்கானிஸ்தான் 38.2 ஓவர்களில் சகல விக்கெற்கலையும் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்தது. கம்மின்ஸ், ஸம்பா ஆகியோர் தலா மூன்ரு விக்கெற்களையும் ஸ்டானிஸ் இரண்டு விக்கெற்களையும், ஸ்டொக் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச், டேவிட் வானர் ஆகிய இருவரும் முதல் விக்கெற்றில் 99 ஓட்டங்கள் எடுத்தனர். பிஞ்ச் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 34.5 ஓவர்களில் மூன்று விக்கெற்கலை இழந்த அவுஸ்திரேலிய  209ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. வானர் 89 ஓட்டங்களுடனும் மக்ஸ்வெல் நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழகாது களத்தில் நின்றனர். ஆட்டநாயகன் விருது வானருக்கு வழங்கப்பட்டது.

No comments: