கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் பங்களாதேஷுக்கு எதிராக நடந்த போட்டியில் 106 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டார் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 381 ஓட்டங்கள் எடுத்தது. ட்ட்ட் ஓவர்கள் விளையாடிய பங்களாதேஷ் சகல விக்கெற்களையும் இழந்து 281 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தானுக்கு
எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இருவர் சதம் அடித்தும் இங்கிலாந்து தோல்வியடைந்தது. பங்களாதேஷுக்கு எதிராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோய் சதம் அடித்தார். இந்தத் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் மூவர் சதம் அடித்துள்ளனர். மூன்று போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து மூன்றிலும் 300 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளது.
இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜானி பேர்ஸ்டோவும் ஜாசன் ரோயும் முதலில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி பின்னர் அதிரடியாக விளாசினார்கள். 15 ஆவது ஓவரில் இங்கிலாந்து 100 ஓட்டங்களை எட்டியது. 51 ஓட்டங்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழக்க இங்கில்லந்து 128 ஓட்டங்கள் எடுத்தது. ஜாசன் ராயுடன் ஜோரூட் இணைந்தார். அபாரமாக விலையாடிய ரோய் 92 பந்துகளில் சதம் அடித்தார். இது ராயின் ஒன்பதாவது சதம். ஜோரூட் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 121 ஒஅந்துகளுக்கு முகம் கொடுத்த ரோய் 153 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜோஸ் பட்லரும், கப்டன் மோர்கனும் இணைந்து பங்களாதேஷ் வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பட்லர் தூக்கியடித்த ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே காணாமல் போனது
பட்லர் 64 ஓட்டங்களும் (44 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), மோர்கன் 35 ஓட்டங்கள்களும் (33 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களும் குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் 2 சிக்சருடன் 18 ஓட்டங்ரன்களும், பிளங்கெட் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ஓட்டங்களும் (9 பந்து) அடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 386 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து கடைசி 10 ஓவர்களில் மட்டும் 111 ஓட்டங்கள் எடுத்தது..
387
ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேஷ் வீரர்கள், குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சகிப் அல் ஹசன் 121 ஓட்டங்கள் அடித்து நம்பிக்கையூட்டினார். முஜிபுர் ரஹ்மான் 44 ஓட்டங்கள் அடித்தார். ஏனையவர்கள் அதற்கும் குறைவான ஓட்டங்களே அடித்தனர். ஆர்ச்சர், பிளங்கெற் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களை வீழ்த்தினர்.
பங்களாதேஷ் 48.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 280 ஓட்டங்கள் எடுத்தது.. இங்கிலாந்து அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 2015-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. பங்களாதேஷுக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
No comments:
Post a Comment