தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக செளதாம்டனில் ரோஸ் பெளல் மைதானதில் நடைபெற்ற போட்டியில் தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இந்தியா ஆறு விக்கெற்களால் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த தென்.ஆபிரிக்கா மீண்டும் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக 300 ஓட்டங்கள் அடித்தும் தோல்வியடைந்த தென்.ஆபிரிக்கா அடுத்துவரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென். ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடியது. ஐபிஎல் போட்டிகளில் நாணயச்சுழற்சியில் தோல்வி உலகக்கிண்ணத்திலும் கோலியுடன் ஒட்டிக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்.ஆபிரிக்கா ஒன்பது விக்கெற்களை இழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா,நான்கு விக்கெற்களை இழந்து 230 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஆம்லா, 6 ஓட்டங்களுடனும், டிகொக் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் டூபிளெஸ்ஸிஸ், வேண்டர் டூசன் ஆகியோர் இணைந்து நிதானமாக விளையாடினர். 10 ஓவர்களில் இரண்டு விக்கெற்களை இழந்த தென். ஆபிரிக்கா 34 ஓட்டங்கள் எடுத்தது. டூபிளெஸ்ஸிஸ் 38, வேண்டர் டூசன்31 டேவிட் மில்லர் 31,டுமினி 3, பெலுக்வாயோ 34 ஆகியோர் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர் எட்டாவது விக்கெற்றில் இணைந்த ரபாடா, மொரிஸ் ஆகியோர் அணீயை கரைசேர்க்க முயற்சித்தனர். இந்திய சுழலில் சிக்கிய தென்.ஆபிரிக்க 50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 10 ஒவர்களில் 66 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா எடுத்தது. சஹால் நான்கு, பிரவீன்குமார், பும்ரா அகியோர் தலா இரண்டு,குல்தீப் ஜாதவ் ஆகியோர் ஒரு விக்கெற்றை வீழ்த்தினர்.
தவான் எட்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவுடன் இணைந்த கோலி நிலைக்கவில்லை. 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா,ராகுல் ஜோடி இந்திய அணியை மீட்கப் போராடியது. 26 ஓட்டங்களில் ராகுல் ஆட்டமிழக்க 35 ஆவது ஓவரில் மூன்று விக்கெற்களை இழந்த இந்தியா 150 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித்துடன் டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய டோனி தனது 23 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். டோனி 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 270 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் 122 ஓட்டங்களுடனும், பண்டையா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
ரபாடா இரண்டு விக்கெற்களையும், பெலுக்வாயோ, மார்க்கம் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். சதம் அடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
23
சதம் அடித்த ரோஹித் சர்மா, தென். ஆபிரிக்காவுக்கு எதிராக் மூன்று சதம் அடித்துள்ளார். உலகக்கிண்ணத்தில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
எதிரணியை விரட்டி 11 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கும் வீரர்களில் இலங்கை வீரர் டில்சானுடன் ரோஹித் இணைந்துள்ளார் கோலி 25, சச்சின் 17, கெய்ல்ஸ் 12 சதங்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.
ரோஹித் சர்மா இரண்டு கச்களைப் பிடிக்கவில்லை. ரோஹித் கொடுத்த நான்கு கச்களை தென். ஆபிரிக்க வீரர்கள் தவறவிட்டனர்.
உலககிண்ணப் போட்டிகளில் 33 வீரர்களை ஆட்டமிழக்கச்செய்த விக்கெற் கீப்பர் வரிசையில் மெக்கலத்தை [32] முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் டோனி முதலிடத்தில் சங்கராரவும் [54], இரண்டாம் இடத்தில் கில்கிறிஸ்ட்டும் [52] இருக்கின்றனர்.
No comments:
Post a Comment