Sunday, June 2, 2019


கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் இலங்கையை எதிர்த்து விளையாடிய நியூஸிலாந்து 10 விக்கெற்களால் வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை போராடாமல் வீழ்ந்தது. 1996 ஆம் ஆண்டின் பின்னர் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்த இலங்கை இன்று அடித்து நொருக்கலாம் எனும் துணிவுடன் எதிரணிகள் இருக்கின்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் இலங்கையைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 29.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 136 ஓட்டங்கள் எடுத்தது. 137 எனும்  மிகக்குறைந்த வெற்ரி இலக்குடன் களம்  இறங்கிய நியூஸிலாந்து  16.1  ஒவர்களில் விக்கெற் இழப்பின்றி 137  ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெற்களால் வெற்றியடைந்தது. ஒரு அணிக்கு 50 ஓவர் போட்டியில் இரண்டு அணிகளும் இணைந்து 45. 3 ஒவர்கள் மட்டும் விளையாடி  ஏமாற்றமளித்தன
.
திரிமானே, அணித்தலைவர் கருணாரத்தன் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். ஹென்றி வீசிய முதலாவ்து பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய திரிமானே, இரண்டாவது  பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.கருணாரத்ரவுடன் குசல் பெரேரா இணைந்தார்.  இருவரும் இணைந்து அணியை மீட்கப் போராடினார்கள். ஆனால் அது முடியாமல் போனது. குசல பெரேரா 29 , திசர பெரேரா 27  ஓட்டங்கள் எடுத்தனர். நான்கு பேர் ஒற்றை இலக்கத்தில்  வெளியேற, மூவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். திசர பெரேரா தனி ஒருவனாக ஆட்டமிழக்காது 50 ஓட்டங்கள் எடுத்தார்.

மேட் ஹென்றி, பேர்குசன் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும், போல்ட், கிராணட் ஹோம, நீஷம், சாட்னர் ஆகியோஎ தலா  ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.
இலங்கை நிர்ணயித்த 137 எனும் இலக்கை, குப்திலும், மொன்ரோவும் பங்கு போட்டு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். குப்தில் 73 ஓட்டங்களும், மொன்ரோ 58 ஓட்டங்களும் அடித்து 10 விக்கெற்களால் வெற்ரி பெற வழிவகுத்தனர். பந்து வீச்சாளர் மெட் ஹென்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உலகக்கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இலங்கை பெற்ற மிக மோசமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக 1979 ஆம் ஆண்டு  189 ஆட்டங்கள் எடுத்ததே குறைந்த எண்ணிக்கையாகும். 136 ஓட்டங்கள் என்பது இலங்கையின் ஆறாவது குறைந்த எண்ணிக்கையாகும்.

உலகக்கிண்ண வரலாற்ரில் 10 விக்கெற்றால் வெற்றி பெற்ற 12 ஆவது போட்டி இதுவாகும்.  இந்தப் பிரமாண்டமான வெற்ரியை நியூஆஇலாந்து முன்ன்றாவது முறை சாதித்துள்ளது. முன்னதாக 2011  ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கென்யா, ஸிம்பாப்வே ஆகியவற்றை 10 விக்கெற்களால் நியூஸிலாந்து தோற்கடித்தது. இலங்கை உலகக்கிண்ணப் போட்டியில் முதன் முதலாக 10 விக்கெற் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

உலகக்கிண்ணப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றது இது இரண்டாவது பதிவு.  இலங்கை வீரர் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் எடுத்தார். 1999 ஆம் ஆண்டு மேற்கு இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழக்காமல் 49 ஒட்டங்கள் எடுத்தார்.

கார்டிப் மைதானத்தில் இலங்கை இன்றுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியது. ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை.
கப்தில் 35 ஆவது அரைச்சதத்தையும் ,மொன்றோ எட்டாவது அரைச்சதத்தையும் எட்டினார்கள்.

No comments: