ஆரம்பத்துடுப்பட்டக்காரர்களான. அணித்தலைவர் திமுது கருணாரத்தன், குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். 30 ஓட்டங்களில் கருணாரத்ன ஆட்டமிழந்தார். குசல் பெரேராவுடன் திரிமானே இணைந்தார். இவர்கள் இருவரும் அணியைக் காப்பாற்றுவார்கள் என ரசிகர்கள் நம்பினர். திரிமானே 25 ஓட்டங்கலில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் இலங்கையின் நிலை மிக மோசமாகியது. குசல் மெண்டிஸ் 2, ஏஞ்சலோ மத்யூஸ் 0, தனஞ்செய டி சில்வா 0, திஸர பெரேரா 2, இஸுரு உடன 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது.
குசல் பெரேரா தனது 12 ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். 78 ஓட்டங்கள் எடுத்த குசல் பெரேரா, ரஷீட் கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். சுரங்க லக்மால், மலிங்க ஆகியோர் கலத்தில் நின்றபோது மழை பெய்தது. 21 ஆவத் ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்த இலங்கை, ஆறு விக்கெற்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. மழக் காரணமாக 41 ஓவர்கள் விளையாட முடிவு செய்யப்பட்டது. 36.5 ஓவர்கலில் இலங்கை சகல விக்கெற்கலையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. முகமது நபி நான்கு விக்கெற்களையும், ரஷீட் கான், ஸ்ரெட்ரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும், ஹமிட் ஹஸன் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.
மழை காரணமாக டக் வேத் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஷஸாத்,, ஹஸ்ரத்துல்லா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். இலங்கையின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் சொற்ப ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
நஜிபுல்லா சட்ரன் 43 ஓட்டங்களும், ஷசாத் 30 ஓட்டங்களும், மொஹமது நபி 23 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். 32.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ஆப்கானிஸ்தான் 152 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. பிரதீப் நான்கு விக்கெற்களையும், மலிங்க விக்கெற்களையும், உடன்,பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். பிரதீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
100
போட்டிகளில் விளையாடிய இலங்கை வீரர் லாஹிரு திரிமானே 25 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 6 ஓட்டங்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 3000 ஒட்டங்களை நிறைவு செய்தார். அடித்தார்து, புதிய மைல்கல்லை கடந்தார்.
அஞ்சலோ மத்ஹ்டியூஸ் டக் அவுட் ஆனார். உலகக்கிண்ணப் போட்டியில் மத்தியூஸின் மூன்றாவது டக் அவுட்டாகும். தொடர்ந்து இரண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் டக் அவுட்டான நான்காவது வீரர்.
ஆப்கானின் சகலதுறை வீரர் முகமது நபி 30 ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இதுவே சிறந்த பந்துவீச்சு ஆகும். 2015 உலகக்கிண்ணத் தொடரில் ஷபூர் சத்ரான் 38 ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெற்கள் எடுத்ததே இருந்ததே முந்தைய சிறந்த பந்துவீச்சு ஆகும்.
இலங்கை பந்துவீச்சாளர் நுவான் பிரதீப்பும் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், இந்த சாதனையை செய்யும் ஒன்பதாவது இலங்கை வீரர் ஆவார்.
சர்வதேச
போட்டியில் இலங்கை அணியின் வெற்றியில் சுமார் 687 நாட்களுக்குப் பின் பங்கேற்றுள்ளார் லசித் மலிங்கா. இந்த இடைவெளியில் மலிங்கா இலங்கை அணிக்காக 22 ஒருநாள் போட்டிகள், ஆறு ரி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால், எதிலும் இலங்கை அணி வெற்றி பெறவில்லை. அந்த குறையை போக்கியுள்ளது இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி. மேலும், மலிங்கா உலகக்கிண்ணத் தொடரில் அதிக விக்கெற்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் 24 உலகக்கிண்ணப் போட்டிகளில் 46 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். மெக்கிராத் 71, முத்தையா முரளிதரன் 68, வாசிம் அக்ரம் 55, சமிந்தா வாஸ் 49 விக்கெற்களை வீழ்த்தி, முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment