Wednesday, May 27, 2020

14 நாட்கள் காத்திருக்க வேண்டாம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம் ஸ்பெய்ன் அறிவிப்பு



கொரோனா அசம் காரணமாக  வெளிநாட்டுப் பயணங்களுக்கு உலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுகு ஸ்பெய்ன் அழைப்பு விடுத்துள்ளது.

சுற்றுலாத்துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஸ்பெய்ன் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 8 கோடி மக்கள் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர். ஸ்பெய்ன் நாட்டின் ஜிடிபி-யில் 12 சதவீதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிறது. 2.6 மில்லியன் வேலைவாய்ப்பை மக்கள் பெற்று வருகிறார்கள்.

கேனரி மற்றும் பலேரிக் தீவுக்கூட்டங்கள் கிட்டத்தட்ட சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ளன. சுற்றுலா சீசன் தொடங்கும் நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஸ்பெய்னை தாக்கியதால் சுற்றுலாத்துறை முற்றிலும் முடங்கிப் போகின. மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதங்கள் சுனாமி போன்று கொரோனா சுழற்றி அடித்தது. இதில் 26 ஆயிரத்து 834 பேர் உயிரிழக்க நேரிட்டது.

தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் சில இடங்களில் பார்கள், மியூசியம், தேவாலயங்கள்  போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன் நாட்டில் மிகவும் அதிக பாதிப்புக்குள்ளான மாட்ரிட், பார்சிலோனா போன்ற நகரங்களில் கூட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. லா லிகா உதைபந்தாட்ட  லீக் போட்டிகள் ஜூன் 8 ஆம் திகதி முதல்  மீண்டும் தொடங்க இருக்கின்றன.



இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜூலை 1-ந்திகதியில் இருந்து ஸ்பெய்ன் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தவித கோரன்டைன் நடைமுறையை பின்பற்ற வேண்டாம் என கேபினட் மந்திரிகள் கூட்டத்தில் முடீவு எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஏற்கனவே கடந்த வாரம், ‘‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஜூலையில் இருந்து வரவேற்க ஸ்பெய்ன் தயாராக இருக்கின்றது. ஆனால், கட்டாயம் இரண்டு வாரங்கள் கோரன்டைன் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: