கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ்
தொற்று பரவலை தடுப்பதற்காக உலகமெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பொருளாதாரத்தை உலுக்கி விட்டது. தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியதால் இதுவரை உலகம் காணாதவகையில் பொருளாதார பேரழிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், நியுயார்க்கில் வளர்ச்சிக்கான
நிதி உதவி குறித்த உயர் மட்ட கூட்டம் ஒன்றில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர்
ஆண்டனியோ குட்டரெஸ் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒற்றுமையுடனும்,
ஒருங்கிணைந்தும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்போது இதை செய்யாவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நோயானது, உலகம் முழுவதும் கற்பனை செய்ய முடியாத பேரழிவையும், துன்பத்தையும் ஏற்படுத்தி விடும். மேலும் 6 கோடி மக்களை அது ஏற்கனவே வறுமையில் ஆழ்த்தி விட்டது. உலகின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சரி பாதியளவு, அதாவது 160 கோடிப்பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்”
என வேதனையுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயானது
உலகளவில் உற்பத்தியில் 8½ டிரில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.637 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தி விடும். இது 1930-களில் ஏற்பட்ட பெருமந்த நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை ஆகும்” என்று கூறினார்.
No comments:
Post a Comment