Saturday, May 30, 2020

மருத்துவமனையில் திருடிய குரங்கால் அச்சத்தில் மக்கள்


உத்தர பிரதேசம் மீரட்டில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா வார்டு உருவாக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் மீது குரங்கு ஒன்று அமர்ந்து மருத்துவமனையின் ஊழியர்களை தாக்கி ரத்த மாதிரிகளையும், ஆபரேசன் க்ளோவ்ஸ்-களையும் திருடி வந்து சாப்பிட முயற்சி செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

கொரோனா வைரஸ்-க்கான வார்டில் இருந்து ரத்த மாதிரிகளை குரங்கு  திருடி வந்ததால் அக்கம்பக்கம் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

நடந்த சம்பவம் உண்மைதான், ஆனால் குரங்கு திருடிச் சென்றது தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரி இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.கே. கார்க் கூறுகையில் ‘‘குரங்கு திருடிச் சென்றது கொரோனா டெஸ்ட் மாதிரிகள் அல்ல. ஆனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பது வழக்கமான நடைமுறைதான். குரங்கு திருடிச்சென்றது புதிதாக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள்.

கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குளிர்ந்த பாக்சில் வைத்து கொண்டு செல்லப்படும். அது திறந்த வெளியில் வைக்கப்படாது. குரங்கில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்த சம்பவத்தால் கொரோனா வைரைஸ் பரவ வாய்ப்பு இருக்குமோ என அருகில் உள்ளவர்கள் அச்சப்படத்தேவையில்லை’’ என்றார்.

 

No comments: