Tuesday, May 26, 2020

கரோனாவால் மரணமடைந்த அமெரிக்கர்களுக்கு நியூயோர்க் டைம்ஸின் அஞ்சலி


அமெரிக்க நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தினசரிகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ், அந்நாட்டில் கரோனாவால் மரணமடைந்த மக்களுக்கான அஞ்சலியை,   ஞாயிற்றுக்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த ஆயிரம் பேரின் பெயர், வயது, வேலை, ஒரு வாக்கியத்தில் எழுதப்பட்ட பிரத்தியேக அஞ்சலிக் குறிப்புடன் தனது முதல் பக்கத்தைச் சமர்ப்பித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் தேசிய ஆசிரியர் மார்க் லேசி, “நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் யாராவது வரலாற்றைத் திரும்பப் பார்க்கும்போது எத்தனை மனித பலிகளின் ஊடாக நாம் வாழ்ந்தோம் என்பதைச் சொல்ல வேண்டுமென்று திட்டமிட்டோம். இங்கு ஆயிரம் பேருக்கு அஞ்சலிக்குறிப்பை எழுதியுள்ளோம். அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வது ஒரு சதவீதம் பேரை. இறந்தவர் யாரும் வெறும் எண் அல்லஎன்கிறார்.

நியூயார்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அஞ்சலிக் குறிப்பிலிருந்து சில உதாரணங்கள்:
உலக அளவில் கரோனா வைரஸுக்கு பெரும் மனித உயிர்களைக் கொடுத்த நாடு அமெரிக்கா  சனிக்கிழமை இரவு வரை 97 ஆயிரத்து 48 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

லிலா . பென்விக், 87, நியூயார்க் சிட்டி, ஹார்வேர்ட் சட்டப் பள்ளியில் படித்த முதல் கருப்பினப் பெண், மைல்ஸ் கோக்கர், 69, சிறையிலிருந்து விடுதலையானவர், ரூத் ஸ்கேபினோக், 85, ரோஸ்விலி, புறக்கடைக்கு வரும் பறவைகள் இவரின் கையிலிருந்து உணவைச் சாப்பிடும்.

No comments: