கொரோனா வைரஸ் எப்படி உருவானது மற்றும் எவ்வாறு பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில்
அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன.
வீடியோ கான்பிரஸ் மூலம் உலக சுகாதார அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியா
கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 120 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
இதனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பாக விரிவான, சுதந்திரமான விசாரணை போதிய ஆதரவு கிடைதுள்ளது. வைரஸ் தொடர்பான விசாரணைக்கு
முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு
பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment