ஐரோப்பிய நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே நடைபெறும் யூரோ2020 தொடரில் நேற்று இரவு டென்மார்க் தலைநகரான கோபன்கேஹனில்
டென்மார்க், பின்லாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியின்
போது டென்மார்க்கின் நட்சத்திர வீரரான
கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென நிலை தடுமாறி விழுந்ததால்
உதைபந்தாட்ட ரசிகர்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
பலம் வாய்ந்த டென்மார்க்குக்கு எதிராக யூரோ கிண்ண உதைபந்தாட்ட அரங்கில் முதன் முதலாக பின்லாந்து களம் இறங்கியது. இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு முன்பு சகவீரரின் மைதானத்துக்கு வெளியே சென்ற பந்தை சக வீரரிடம் இருந்து பெற ஓடியபோது கிறிஸ்டியன் எரிக்சன் நிலை தடுமாறி விழுந்தார். அருகிலே யாரும் இல்லாதபோது விழுந்த எரிக்சன் உடனடியாக எழும்பவில்லை. இதனைக் கவனித்த நடுவர் அந்தோனி டெய்லர் போட்டியை இடைநிறுத்தி மருத்துவகுழுவை அழைத்தார்.
மைதானத்துக்கு விரைந்த மருத்துவகுழு அவருக்கு அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அறிந்து இதயத்தை துடிக்கச்செய்யும் சிகிச்சையளித்தனர்.
சகவீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
சந்தோசமாக ஆரவாரம் செய்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொலைக் காட்சியில் ரசித்துகொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
எரிக்சன் விழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி தடுப்பு சுவர்களைத்தாண்டி அழுதுகொன்டு ஓடினார்.
சகவீரர்கள் விரைந்து
சென்று அவரைக் கட்டிப்பிடித்து தேற்றினர்.
எரிக்சனுக்கு முதல் உதவி செய்த மருத்துவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
போட்டி இடைநிறுத்தப்பட்டது. மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் எரிக்சனுக்காகப் பிரார்த்தனை செய்தனர். 29 வயதான எரிக்சன் டென்மார்க்கின் மத்தியகள வீரராவார். டென்மார்க், இன்ரமிலான் ஆகிய உதைபந்தாட்ட அனிகளின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர வீரரான கிறிஸ்ரியன் டெனிமான் எரிக்சனுக்காக உலகில் உள்ள ரசிகர்கள் அனைஅவ்ரும் பிரார்த்தனை செய்தார்கள். 108 போட்டிகளில் விளையாடிய எரிக்சன் 36 கோல்கள் அடித்துளார்.
தீவிர சிகிச்சையின் பின்னர் கிறிஸ்ரியன் எரிக்சன் ஆபத்தான கட்டத்தை தாண்டி வைத்தியர்களுடன் அளவளாவும் செய்தி கிடைத்ததும் மைதானத்தில் கூடி இருந்த
ரசிகர்கள் அனைவரும்
கைதட்டி ஆன்ந்தக்கண்ணீவிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இடை நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.
பலம் வாய்ந்த டென்மார்க் அணிக்கு ஈடு கொடுத்து பின்லாந்து விளையாடவில்லை. டென்மார்க் வீரர்கள் ஆறுமுறை கோல்கம்பத்தை நோக்கி பந்தை அடித்தனர். அவை எல்லாம் தடுக்கப்பட்டன. பின்லாந்து அணி ஒரே ஒருமுறை மட்டும் கோல்கம்பத்தை நோக்கி பந்தை செலுத்தியது அது கோலாகிவிட்டது. 1 0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து வெற்றி பெற்றது.
வேல்ஸ், சுவிட்சர்லாந்து ஆகியவற்ருக்கிடையேயான போட்டி 1
1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.ரஷ்யாவை எதிர்த்து விளையாடிய பெல்ஜியம் 3
0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment