ரோமில் நடைபெற்ற யூரோ
2020 கிண்ண முதலாவது போட்டியில்
துருக்கிக்கு எதிராக விளையாடிய இத்தாலி 3 - 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இடைவேளை
வரை கோல் எதுவும்
அடிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக 27 போட்டிகளில் வெற்றி பெற்ற இத்தாலி தனது தொடர் வெற்றியைத் தக்கவைத்துள்ளது.
போட்டி முழுவதும்
இத்தாலியின் கட்டுப்பாட்டிலேயே
இருந்தது.இடைவேளைக்குப் பின்னர் 53 ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரரிடம் இருந்து பந்தை
நெஞ்சால் தடுக்க துருக்கி வீரர்
மெரி டெமிரால் முயற்சி செய்தபோது
பந்து கோல் கம்பத்தினுள் சென்றதால் இத்தாலிக்கு
ஒரு கோல்
கிடைத்தது.
66 வது நிமிடத்தில் சிரோ இம்மொபைலும் 79வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னியும் கோல்களை அடிக்க இத்தாலி முதல் முறையாக யூரோவில் 3-0 என்று வெற்றி பெற்றது. துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இத்தாலி
அணி வீரர்கள் 64% பந்தை தமது கட்டிப்பாட்டில் வைத்திருந்தனர்.
இரு அணி வீரர்களும்
பந்தை துல்லியமாக
சக வீரர்களுக்குக் கொடுத்தனர்.
துருக்கி வீரர்கள் 10 முறையும், இத்தாலி வீரர்கள்
8 முறையும் விதி
மீறினர். துருக்கி வீரர்களுக்கு எதிராக இரண்டு முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
துருக்கி வீரர்கள் 3 முறை கோல் அடிக்க முயற்சி செய்தனர் எவையும்
கோல் கம்பத்
தை நோக்கிச் செல்லவில்லை.
இத்தாலி வீரர்கள் 24 முறை கோல் அடிகக் முயற்சித்தனர்.
8 முறை
கோல் கம்பத்தை நோக்கிச் சென்ற பந்து தடுக்கப்பட்டது.
இன்றைய போட்டிகள்
வேல்ஸ்-சுவிட்ஸர்லாந்து (ஏ
பிரிவு)
இடம்:
பாகு, இரவு
6.30 மணி
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரண்டு அணிகளுக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.இத்தாலி, துருக்கி ஆகிய பலமான அணிகளும் இருப்பதால் நாக்-அவுட் சுற்றை எட்டுவது எளிதான விஷயம் அல்ல. 2016ஆம் ஆண்டு யூரோ சாம்பியன்ஷிப்பில் அரைஇறுதிவரை முன்னேறி வியப்பூட்டிய வேல்ஸ் அணியில் முந்தைய சாம்பியன்ஷிப்பில் ஆடிய 8 வீரர்கள் இப்போதும் நீடிக்கிறார்கள். ஆனால் காரெத் பாலே, ஆரோன் ராம்சி, ஜோ ஆலென், டேனியல் ஜேம்ஸ் ஆகியோர் முன்னரைப்போல துடிப்பாக விளையாடாதது சற்று பின்னடைவாக
உலக
தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள
சுவிட்ஸர்லாந்து கடைசியாக ஆடிய 6 சர்வதேச போட்டிகளில்
வெற்றி கண்டிருக்கிறது. வலுவான ஸ்பெய்னுக்கு எதிரான
போட்டி ஒன்றை சமநிலைஅயில் முடித்தது. கிரானிட்
ஷாகா, ஹெர்டான் ஷாகிரி, டெனிஸ் ஜகாரியா,
ரெமோ பிரெலர் நம்பிக்கை தருகிறார்கள்.
ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால்
யாருடையுடன் கை ஓங்கும் என்பதை
கணிப்பது கடினம்.
டென்மார்க்-பின்லாந்து (பி பிரிவு)
இடம்:
கோபன்ஹேகன், இரவு 9.30 மணி
ஐரோப்பிய
சாம்பியன்ஷிப்புக்கு பின்லாந்து அறிமுக அணியாக அடியெடுத்து
வைக்கிறது. சிமோன் கிஜார் தலைமையிலான
டென்மார்க் அணிக்கே வெற்றி வாய்ப்பு
அதிகம்.
பின்லாந்தை
பொறுத்தவரை எதிர்பார்ப்பும் ஏதும் கிடையாது. ஆனால்
பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதி சுற்று போட்டிகளில்
10 கோல்கள் அடித்த டீமு புக்கி,
பிரெட்ரிக் ஜென்சன் கவனிக்கத்தக்க வீரர்களாக
உள்ளனர்.
பெல்ஜியம்ரஷ்யா (பி பிரிவு)
இடம்:
சென்.பீட்டர்ஸ் பர்க், நள்ளிரவு 12.30 மணி
சம்பியனாகும் வாய்ப்பு உள்ள
அணிகளில் ஒன்றான பெல்ஜியம் உலகின்
‘நம்பர் ஒன்’ அணியாக திகழ்கிறது.
ரோம்லு லுகாகு அவர்களின் ஆணிவேராக
இருக்கிறார். கிளப் போட்டியில் ஆடிய
போது முகத்தில் காயமடைந்த முன்னணி வீரர் கெவின்
டி புருனே இன்று விலையாடமாட்டார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காயத்தால்
அவதிப்படும் ஈடன் ஹசார்ட்டும்
சந்தேகம் தான். ஆனாலும் பெல்ஜியம்
அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை.
உலக
தரவரிசையில் 38 ஆவது இடம் வகிக்கும்
ரஷ்யாவுக்கு உள்ளூர் சூழல் அனுகூலமாக
அமையும். ஆனால் வலுமிக்க பெல்ஜியத்தை
மிரட்ட வேண்டும் என்றால் அலெக்சாண்டர் கோலோவின்,
ஆர்டெம் ஜியூபா போன்ற ரஷ்ய
வீரர்கள் தங்களது முழு திறமையை
வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment