Friday, June 11, 2021

ஐரோப்பிய உதைபந்தாட்ட திருவிழா

ஐரோப்பிய   நாடுகளின்  சம்பியன்  யார் என்பதை  தீர்மானிக்கும்  யூரோ 2020 இன்று ரோமில்  ஆரம்பமாகிறது.  2021  ஆம்  ஆன்டு  நடைபெற  வேன்டிய  இந்தத்   தொடர்  கொரோனா  காரணமாக  ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த  மாதம்  11  ஆம்  திகதி  இலன்டனின்  நடைபெறும்  இறுதிப்போட்டியில் வெற்றி  பெறும்  நாடு  யூரோ  2020  சம்பியன்  கிண்ணத்தை  முத்தமிடும்.

ஐரோப்பாவின்  11 நகரங்களில்  நடைபெறும் 51  போட்டிகளில்  24  நாடுகள்  மோதுகின்றன.  உலகக்கிண்ண  சம்பியனான பிரான்ஸ்,   இங்கிலாந்து,  இளம்  வீரர்களைக்கொண்ட ஸ்பெய்ன் ,  அனுபவ  வீரர்கள் களமாடும்  ஜேர்மனி  ஆகியவற்றில்  ஒன்று சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24  நாடுகளும் ஆறு  பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டு  ஒரு  பிரிவில் 4 நாடுகள் இடம்  பெறுகின்றன. அவற்றுள்  முதல்  இரண்டு  இடங்களைப்  பிடிக்கும்  12  நாடுகள்  இரண்டாவது   சுற்றுக்குத்   தெரிவு  செய்யப்பட்டு நொக்  அவுட்   முறையில்  போட்டிகள்  நடைபெறும்.

:  துருக்கி,  இத்தாலி, வேல்ஸ்,  சுவிட்ஸர்லாந்து.

பீ:  டென்மார்க்,  பின்லாந்து,  பெல்ஜியம்,   ரஷ்யா

சீ:  நெதர்லாந்து,  உக்ரெய்ன்,  ஒஸ்ரியா,,  மசடோனியா

டீ:  இங்கிலாந்து,  குரோஷியா,   ஸ்கொட்லாந்து,  செக். குடியரசு

:   ஸ்பெய்ன்,   சுவீடன்,  போலந்து,   ஸ்லோவாக்கியா

எஃப்: ஹங்கேரி,   போத்துகல்,  பிரான்ஸ்,  ஜேர்மனி

நடப்பு  சம்பியனான   போத்துகல்  நட்சத்திர  வீரரான  கிறிஸ்டியானி  ரொனால்டோவை   மட்டுமே நம்பி  உள்ளது. நடுவரிசை வீரரான புருனோ பெர்ணான்டஸ்   ரொனால்டோவுக்கு  உதவக்கூடும். நடப்பு  சம்பியனான  போத்துகலுடன்   முன்னாள்  சம்பியன்களான  ஜேர்மனி, பிரான்ஸ்   ஆகியனவும்  எஃப் குழுவில்  இருப்பதால்   போட்டி  கடுமையாக இருக்கும்.

ஜேர்மனி  அணியில்   அனுபவ  கோல்கீப்பரான  மனுவல் நூயர்,  தோமஸ்  முல்லர், ஹம்ம்லல்ஸ்  ஆகியோரும்,  பிரான்ஸ்  அணியில்  பென்சிமா, போக்பா,  கிரைஜ்மான்  ஆகியோரும்  இருப்பதால் எதிர்பார்ப்பு  எகிறியுள்ளது.  

இங்கிலாந்து  அணியில் மார்கஸ்ராஷ்போர்ட்,கப்டன்  ரி கேன், ஜோர்டன் ஹென்டர்சன், ரீஸ் ஜேம்ஸ் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக வலம் வருகின்றனர்.  தர  வரிசையில்   முன்னணியில்  உள்ளா இத்தாலி [7], சுவிட்சர்லாந்து [13] ,  வேல்ஸ் [17 ] ஆகியனவும் இங்கிலாந்துடன்  குழு  யில்  உள்ளன.    

கறுப்பு  குதிரை   என   வர்ணிக்கப்படும்  துருக்கிபெல்ஜியம்நட்சதிர  வீரர்  வான்  ஜிக்  இல்லாமல்  காத்திருக்கும்  நெதர்லாந்துபலோ  டெல்லியை  நம்பிய இத்தாலி  ஆகியன  எதிரனிகளுக்கு சவால்  விட  காத்திருக்கின்றன.ஸ்பெய்ன்  அணியின்  கப்டன் செர்ஜியோ,   டீகோ  லோரண்டே  ஆகிஒய  இருவரும்  கொரோனாவால்  பாதிக்கப்பட்டது  அந்த  அணிக்கு  பெரும்  பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது


1960  ஆம்  ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட  யூரோ சம்பியன்  போட்டியில்  இதுவரை  10  நாடுகள்  சம்பியனாகியுள்ளன. 1960  ஆம்  ஆண்டு  ரஷ்யா சம்பியனானது. நடப்பு  சம்பியனாக  போத்துகல் [2016]  விளங்குகிறது. ஜேர்மனி [1972, 1980, 1996] , ஸ்பெய்ன் [ 1964, 2008, 2012 ]  ஆகியன் தலா  மூன்று  முறையும், பிரான்ஸ்[ 1984,  2000]  இரண்டு முறையும்  சம்பியனாகியது.

இத்தாலி [1968],  செக் [1976],  நெதர்லாந்து [1988], டென்மார்க்[  1992], கிறிஸ்[ 2004]  ஆகிய நாடுகள்  தலா  ஒருமுறை  சம்பியனாகின.

சர்வதேச  உதைபந்தாட்ட  அரங்கில் 103   கோல்கள் அடித்த  ரொனால்டோ   இரண்டாவது  இடத்தில்  உள்ளார்.ஈரான்  வீரர்  அலிதயேய்  109  கோல்கள்  அடித்து  முதலாவது  இடத்தில்  இருக்கிறார். யூரோ  கிண்ணத்தொடரில் அதிக  கோல்கள்  அடிக்கும்  பட்சத்தில்  ரொனால்டோ முதலிடத்துக்கு  முன்னேறுவார் என ரசிகர்கள்  எதிர்பார்க்கிறார்கள்.

ப்ரான்ஸ்  வீரரான  மைக்கல்  பிளட்டினியும்,  ரொனால்டோவும்  யூரோ  கிண்ணத்தொடரில்  தலா 9  கோல்கள்  அடித்துள்ளனர். ஒரு  கோல்  அடித்ததும்  ரொனால்டோ  முதலிடத்தைப்  பிடிப்பார்.


  சுவிட்ஸர்லாந்து, (6,218 கி.மீ) , பெல்ஜியம் [ 5,876கி.மீ],  போலந்து (5,690 கி.மீ)  ஆகியன 5,000   கி.மீ  பயனம்  செய்து  யூரோ  கிண்ணப்  போட்டிகளில்  விளையாட  உள்ளன.  இங்கிலாந்து,இத்தாலி, ஸ்பெய்ன்,  போலந்து, ஜேர்மனி  ஆகியன தமது  நாட்டு  மைதானங்களில்  அதிக  போட்டிகளில் விளையாடுவதால்  அவற்ரின்  பயணத்தூரம்  குறைவாகும்.

ஒரு மாதத்துக்கு உதைபந்தாட்ட  ரசிகர்கள்  கொரோனாவைப்  பற்ரி  பயப்படாமல்  மகிழ்ச்சியாக  இருக்கப்போகின்றனர்.

No comments: