Wednesday, June 16, 2021

ரொனால்டோவின் புதிய சாதனை


 யூரோ  கிண்ணப்  போட்டியில் அதிக  கோல்  அடித்து  ரொனால்டோ  புதிய  சாதனை  படைத்துள்ளார்.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

  புடாபெஸ்ட் நகரில்   நடந்த  எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் மோதின‌. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடவில்லை.

பிற்பாதியில் கடைசி கட்டத்தில் போர்ச்சுகல் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்தது. 84-வது நிமிடத்தில் ரபெல் குயரிரோ கோல் அடித்தார். 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய ரொனால்டோ, கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். பிரமிக்க வைத்தார்.

முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ யூரோ  கிண்ண உதைபந்தாட்ட  வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில்ஜேர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. உள்ளூர் ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜெர்மனி அணியில் வீரர்கள் சோபிக்க தவறினர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின்  பின்கள  வீரர் மாட்ஸ்  ஹம்மல்ஸ் கோல் போவதைத் தடுக்க  முயற்சி  செய்தபோது  அது  கோலாகியது.

No comments: