பிரெசிலியாவில் நடைபெற்ற குரூப் ஏ ஆட்டத்தில் ஆஜென்ரீனாஅணி உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்த வெற்றி மூலம் ஆஜென்ரீனா கடந்த 15 போட்டிகளாக தோல்வியடையாமல் ஆடி வருகிறது. கடைசியாக 2019 கோபா அமெரிக்கா கால்பந்தில் அரையிறுதியில் தோல்வியடைந்தது.
உருகுவே
அணி கோபா அமெரிக்கா போட்டியில் 1989-க்குப்
பிறகு ஆர்ஜென்ரீனா
வீழ்த்தியதில்லை, இப்போதும் வீழ்த்த முடியவில்லை.
ஆர்ஜென்ரீனாவுக்கு எட்டு கோர்னர் கிக் வாய்ப்புகள்
கிடைக்க உருகுவே அணிக்கு 3 முறை கோர்னர் வாய்ப்பு கிடைத்தது. உருகுவே 5 முறை கோல்களை
தடுத்தது, ஆனால் ஆர்ஜென்ரீனா அப்படி சேவ் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை காரணம்
கோல் அடித்து விடுவோம் என்ற அச்சுறுத்தலை உருகுவே அர்ஜென்ரீனாவுக்கு அளிக்கவே இல்லை.
ஆர்ஜென்ரீனாஅணி
9 முறை கோலை நோக்கி அடித்த 6 ஷாட் இலக்கை
நோக்கி அமைந்தன மாறாக உருகுவே 4 ஷாட்களை கோலை நோக்கி அடித்தாலும் எதுவும் இலக்கை நோக்கி
அமையவில்லை.
ஆட்டம்
தொடங்கிய 4வது நிமிடத்திலேயே ஆர்ஜென்ரீனாவின் மார்கஸ் அகுனா உருகுவே கோல் அருகே சென்று
இடது காலால் அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. 6வது நிமிடத்தில் உருகுவே வீரர் மத்தியாஸ்
வினா ஃபவுல் செய்ய மெஸ்ஸிக்கு வலது ஓரம் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பாக்சுக்கு வெளியேயிருந்து
லியோனல் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக் இடது மூலையில் தடுக்கப்பட்டது. மீண்டும் வந்த பந்தை
கொன்சாலேஸ் கோலாக மாற்றத் தவறினார். மிக அருமையான ஷாட் மெஸ்ஸி அடித்தது.
8வது
நிமிடத்தில் ஆஜென்ரீனாவின் தாக்குதலை முறியடிக்க உருகுவே வீரர் எடின்சன் கவானி ஃபவுல்
செய்தார். இதன் காரணமாக இடது ஓரம் ஆஜென்ரீனா வீரர் அகுனா ஃப்ரீகிக் ஷாட்டை அடித்தார்.
இவர் அடிக்க உருகுவே கோல் அருகே மத்தியில் நின்றிருந்த கிரிஸ்டியன் ரொமீரோ தலையால்
முட்டிய ஷாட் தடுக்கப்பட்டது.
11வது
நிமிடத்தில் இன்னொரு உருகுவே வீரர் ரோட்ரீகோ பெண்டங்கர் ஃபவுல் செய்தார். இதனையடுத்து
ஆஜென்ரீனா வீரர் குடியோ ரோட்ரிகெஸ் ஃப்ரீ கிக்கை அடிக்கத் தயாரானார். இந்த ஷாட்டை தடுக்கும்
உருகுவேயின் முயற்சி அர்ஜெண்டீனாவுக்குச் சாதகமாக கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இந்த
கார்னர் ஷாட்டை நேராக கோலுக்கு அருகில் பாக்ஸுக்குள் அடிக்காமல், கார்னர் வாய்ப்பையே
ஷார்ட் பாஸாக ஆட முடிவெடுத்தனர். டீ பால் என்ன செய்தாரென்றால் ஷார்ட் பாசை மெஸ்ஸிக்கு
அடிக்க தாதாகிரியான மெஸ்ஸி மிகத் துல்லியமாக அதை தன் இடது காலால் கோல் அருகே தூக்கி
அடிக்க அங்கு ரோட்ரிகெஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். மிக சாமர்த்தியமான ஒரு மூவ்.
நேராக கார்னர் ஷாட்டை தூக்கி அடித்து அது என்ன ஆகும் என்றே சொல்ல முடியாது, ஷார்ட்
பாஸ் செய்து அதற்குள் அங்கு ஆஜென்ரீனா வீரர்கள் தயாராவதற்கு நேரம் அளித்து மெஸ்ஸியின்
துல்லிய பாஸ் கோலாக மாற்றப்பட்டது.
இந்த
வெற்றி மூலம் ஆஜென்ரீனாஅணி இந்தப் பிரிவில் சிலி அணியுடன் இணைந்து டாப்-ல் உள்ளது,
சிலி அணி பொலிவியாவை முன்னதாக 1-0 என்று வெற்றி பெற்றது. பராகுவா அணி 3 புள்ளிகளுடன்
இருக்கிறது.
ஆர்ஜென்ரீனா
அணி திங்களன்று பராகுவா அணியைச் சந்திக்கிறது.
இதே நாளில் உருகுவே-சிலி அணிகள் மோதுகின்றன.
No comments:
Post a Comment