Monday, June 28, 2021

விளையாட்டாக சில விளையாட்டு செய்திகள்

 

யூரோ2020  முதல்  சுற்றில் நடந்த  36   போட்டிகளில் 94  கோல்கள் அடிக்கப்பட்டன.

 அதிக  கோல்  அடித்த  நாடுகள்

நெதர்லாந்து 8,  இத்தாலி, பெலிஜியம், போத்த்கல்  7,  ஜேர்மனி,  ஸ்பெய்ன்  6, டென்மாக் 5 

 ரொனால்டோ சாதனை 

பிரான்ஸுக்கு  எதிரான போட்டியில் இரன்டு  கோல்கள் அடித்த  ரொனால்டோ  , ஈரானின் அலி டேயின் 109 சர்வதேச ஆட்ட கோல்கள் என்ற உலக சாதனையை சமன் செய்தார்.

ரொனால்டோ  3 போட்டிகளில் 270  நிமிடங்கள்  விளையாடி அதிக  பட்சமாக  5 கோல்கள் அடித்தார். ஒருகோல்  அடிக்க  உதவி  புரிந்தார்.  

ரொனால்டொ   கோல்கம்பத்தை நோக்கி  11 முறை பந்தை  அடித்தார்.6 பந்துகள்  கோல் கம்பத்தினுள் சென்றன.வலது காலால்  3 கோல்கலும் இடது  காலால் 2 கோல்களும்  அடித்தார்.  

 தோல்விக்கு  பொறுப்பேற்ற  பயிற்சியாள‌ர்

யூரோ2020  தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான  போட்டியில்  3-0 என்று தோல்வியடைந்ததால் வடக்கு  மசடோனியா  அணியின்  பயிற்சியாலர்  ஆஞ்சேலோவ்ஸ்கி பதவியை ராஜினாமா செய்தார். அதன் மூத்த வீரர் கோரான் பாண்டேவ் இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறவிருப்பதால் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

  யூரோ  வரலாற்றில்  முதன்  முறையாக 

 ஜெர்மனிக்கு  எதிரான  போட்டியில்   4 நிமிட அவகாசத்தில் போத்துகல்  2 சேம்சைட்  கோல்கள்  அடித்தது. யூரோ  கிண்ண   வரலாற்றில் இரண்டு  சேம்சைட்  கோல்கள்  அடிக்கப்பட்டது  இதுவே முதன்  முறை. அதிக கோல் அடித்து  சாதனை  செய்த  ரொனால்டோ ஜேர்மனிக்கு  எதிராக  தனது  முதலாவது  கோலைப்  பதிவு  செய்தார். 

| ஸ்லோவாக்கியாவின் 2 சேம்சைடு கோல்கள் 

ஸ்பெயினுக்கு எதிரான  போட்டியில் ஸ்லோவாக்கியா  இரண்டு  கோல்கள்  அடித்ததால்     5-0   எனும் கோல் கணக்கில்தோல்வியடைந்தது. 

சிக்ஸர்  தந்த  சோகம் 

இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஷிப்  அலி  எனும்  வீரர்  ஓங்கி  அடித்த  பந்து  சிக்ஸருக்குப்  போனதால்  தலையில்  கையை  வைத்த்தபடி மைதானத்தில்  இருந்துவிட்டார்.ஆஷிப்  அலி அடித்த  பந்து  அவரின்  கார்க் கண்ணாடியைப்  பதம்  பார்த்தது. 

நெய்மர்  இல்லாத  ஒலிம்பிக்  அணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பிறேசில்   அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான பிறேசில் அணியின் க‌ப்டனாக பின்கள வீரர் 38 வயது டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.முழங்கால் காயத்தால் கோபா அமெரிக்கா போட்டியில் விளையாடாத அவருக்கு க‌ப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது. இதேபோல் 31 வயதான கோல்கீப்பர் சான்டோஸ், 28 வயது பின்கள வீரர் டியாகோ கார்லோஸ் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். நட்சத்திர வீரரான 29 வயதான நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஒலிம்பிக் போட்டிக்கான உதைபந்தாட்ட  அனியில் 3 வீரர்களை தவிர எஞ்சிய அனைவரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனால் நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

அட்டகாச  ஆர்ஜென்ரீனா 

2019-ல் கோப்பா அமெரிக்கா அரையிறுதியில் தோற்றதற்குப் பிறகு ஆர்ஜென்ரீனா  16 போட்டிகள்   தோல்வி பெறாமல் சாதனை ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

25 போட்டிகளில்  கோப்பா அமெரிக்கா   தொடரில் ஆர்ஜென்ரீனாவை பராகுவா வென்றதேயில்லை

ஆர்ஜென்ரீனாவுக்காகஅணிக்காக 147வது போட்டியில் விளையாடியமெஸ்ஸி, ஜேவியர் மஸ்செரானோவின் சாதனையை சமன் செய்தார்.

 

No comments: