Thursday, June 17, 2021

யூரோகிண்ண அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி


 யூரோ2020  கிண்ணப்  போட்டியில்  விளையாடிய  இரண்டு  போட்டிகளிலும்   வெற்றி  பெற்றதால் அடுத்த  சுற்றுக்கு  முதல்  அணியாக  தெரிவானது  இத்தாலி.

 குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்ஸ‌ர்லாந்து, இத்தாலி ஆகியவற்ருக்கிடையே  நடைபெற்ற  போட்டியில்  3  0  எனும்  கோல்  கனக்கில்  இத்தாலி  வெற்றி  பெற்றது. ஆட்டத்தின் 26  ஆவது, 52 ஆவது நிமிடங்களில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் சிரோ இம்மோபைல்  ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்ஸ‌ர்லாந்தை, இத்தாலி அணி எளிதாக வீழ்த்தியது.

யூரோ2020  தொடரில்   6  கோல்களை  டித்து  அதிக  கோல் அடித்த  அணியாக  இத்தாலி  விளங்குகிறது.  இத்தாலிக்கு  எதிராக ஒரு  கோல்கூட  அடிக்கப்ப‌டவில்லை. இத்தாலி  தொடர்ச்சியாக 29  ஆவது  வெற்றி. 31  கோல்கள் அடித்துள்ள‌து. எதிரனிகள்  இதுவரை  கோல்  அடிக்கவில்லை.

இத்தாலி அணியின் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய  நடிகை சப்ரினா பெரிலி  நீச்சல் உடையில்  தோன்றி ரசிகர்களை பார்த்து கொடியசைத்தார். யூரோ2020  சம்பியன் கிண்னத்தை  இத்தாலி  வென்றால்   நடிகை  சப்ரினா பெரிலி  நிர்வாணமாக தோன்றுவதாக   உறுதி அளித்து உள்ளதாக  இத்தாலியின்  உதைபந்தாட்ட  ஜாம்பவான் பிரான்செஸ்கோ டோட்டி  கூறியுள்ளார்.

 மற்றொரு ஆட்டத்தில்,   ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி அணியும், வேல்ஸ் அணியும் மோதின. துருக்கி அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காத நிலையில், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே,  கன்னார் ராபர்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது.

வேல்ஸ் 4 புள்ளிகளுடனும்,சுவிட்ஸர்லாந்து  1 புள்ளியுடனும்  உள்ளன. பலம்  வாய்ந்த  இத்தாலியுடன்  வேல்ஸ்  மோதுகிறது.

இரண்டு  போட்டிகளிலும்  தோல்வியடைந்த  துருக்கியுடன்   சுவிட்ஸர்லாந்து மோதுகிறது. இரண்டு  போட்டிகளின்  வெற்றி  தோல்விக்குப்  பின்னரே அந்தப்  பிரிவில்  அடுத்த  சுற்றுக்குத் தெரிவாகும்  அணி  எது  என்பது  தெரிய  வரும்.

  பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, பின்லாந்து ஆகியவற்றுக்கிடையே  நடைபெற்ற  விறுவிறுப்பான  போட்டியில்    45 ஆவது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் முதலாவது கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி ரஷ்யா அணி வெற்றிபெற்றது. பின்லாந்து  தோல்வியடைந்தாலும்  ரஷ்யாவுக்கு  சவால்  விட்டு  விளையாடியது.

No comments: