Sunday, June 20, 2021

ஜேர்மனியிடம் சரணடைந்த போத்துகல்

மியூனிச்சில்  நடைபெற்ற  போத்துகலுக்கு  எதிரான  போட்டியில் 4 2 எனும்  கோல  கணக்கில்  ஜேர்மனி  வெற்றிபெற்றதுபிரான்ஸுக்கு  எதிரான  போட்டியில்  சேம்சைட்  கோல் மூலம்  தோல்வியடைந்த  ஜேர்மனிபோத்துகலுக்கு  எதிரான  போட்டியில்  நான்கு  நிமிடங்களில் இரண்டு  சேம்சைட்  கோல்கள் மூலம்  வெற்றி  பெற்றது. ஐரோப்பிய  உதைபந்தாட்ட  ரலாற்றில்  ஒரு  அணி  இரண்டு  சேம்சைட்  கோல்கள் அடித்தது  இதுவே  முதல்முறை.

ஜேர்மனியின்  வியூகங்களால் போத்துக  வீரர்கள்  தடுமாறினார்கள். பிரான்ஸுக்கு  எதிரான  போட்டியில் ஏமாற்றி  ஜேர்மனி  வீரர்கள்  போத்துகலுடனான  போட்டியில்  ஆச்சரியப்பட  வைத்தார்கள்.

ஜெர்மனி வீரர் ராபின் கோசன்ஸை போர்ச்சுகல்லால் கட்டுப்படுத்தமுடியவில்லை, கடும் அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் போர்ச்சுகல் கோல் அருகே அவர் ஏற்படுத்தினார். முதல் கோலை 5வது நிமிடத்தில் கோசன்ஸ் அடித்தார் ஆனால் ஜேர்மனி வீரர் செர்ஜி நார்பி ஆஃப் சைடு என்பது வீடியோ ரிவியூவில் தெரியவர கோல் ரத்து செய்யப்பட்டது.

ஜேர்மனியின் டோனி குருஸ் கோனர்  அடித்தபோது சற்றும் எதிர்பாரா விதமாக  ரொனால்டோ தொடுத்த எதிர்த்தாக்குதலில் ஜேர்மனி ஆடிப்போனது. பெர்னார்டோ சில்வா, தியாகோ ஜோட்டா ஆகியோர் பந்தை பிரமாதமாக எடுத்துச் சென்று ஜேர்மனி கோல் பகுதிக்குள் விறுவிறுவென நுழைந்தனர்.    தியாகோ சில்வா, மிகப்பிரமாதமாக பந்தைத்   தூக்கி மற்றொரு போர்ச்சுக்கல் வீரரான ஜோட்டாவுக்குக் கொத்தார்.

  சில்வா கொடுத்த பந்தை நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ஜோட்டா கோல் அடிப்பது போல் ஏமாற்றி கோல் கீப்பரை திசைத் திருப்பி பந்தை பக்கவாட்டில் ரொனால்டோவுக்கு அளித்தார். அதை ரொனால்டோ மிகப்பிரமாதமாக கோலாக மாற்றினார் போத்துகல் 1-0 என்று முன்னிலை பெற்றது.ஜேர்மனிக்கு எதிராக ரொனால்டோ அடித்த  முதல்  கோல்  இதுவாகும்.

11வது நிமிடத்தில்   ராபின் கோசன்ஸ் இடது பக்கத்தில் இஷ்டத்துக்கு தடுப்பற்று பந்தை எடுத்து வந்து பெனால்டி பகுதிக்குள் ஊடுருவினார், பிறகு டொனி க்ரூஸுக்கு பந்தை கொடுத்தார், அவர்  அடித்தபோது ரூபன் டயஸ் தடுத்தார்

அதன் பிறகு முழுக்க முழுக்க ஜேர்மனிதான் ஆதிக்கம் செலுத்தியதுவலது புறம் ஜேர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் பந்தை கோலை நோக்கி அடிக்க அதை பேட்ரீசியோ தடுத்தார்.இந்த ஆட்டத்தைத் தீர்மானித்த அந்த 4 நிமிடங்கள் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் வந்தது. மீண்டும் ஜேர்மனி வீரர் ராபின் கோசன்ஸுக்கு இடது ஓரம் ஏகப்பட்ட இடம் கிடைத்தது. இவருக்கு ஒரு அருமையான நீள பாஸ் வந்ததையடுத்து படுவேகம் காட்டி பந்தை எடுத்து சென்றார். கோல் அருகே கொண்டு சென்று ஒரு பலமான உதை உதைத்தார். அங்கு ஜேர்மனி வீரர் ஹாவெட்ஸ்தான் அதை கோலாக்கியிருக்க வேண்டும், ஆனால் போர்ச்சுகல் வீரர் ரூபன் டயஸும் அருகில் இருந்தார். இவர் காலை நீட்ட பந்து பட்டு கோலுக்குள் படுவேகமாக சென்றது, சேம்சைடு கோல் ஆனது ஜெர்மனி போர்ச்சுகல் 1-1. டயஸ் பந்தை அப்படியே விட்டிருக்கலாம், ஏனெனில் ஹாவெட்ஸ் காலில் பந்து படவில்லை. ஆனால் அணியின் கோலை தடுக்கும் முயற்சியில் இவரே சேம்சைடு கோலாக்கியது முதல் அதிர்ச்சி. 4 நிமிடங்கள் சென்று இந்த முறை வலது ஓரத்தில் ஜேர்மனி வேகம் காட்டி பந்தை எடுத்து போர்ச்சுகல் கோலை நோக்கிச் சென்றது. 39வது நிமிடத்தில் பெனால்டி பகுதியின் இன்னொரு புறத்திலிருந்து வந்த பந்தை ஜேர்மனியின் தாமஸ் முல்லர் அடித்தார். இதை ஹாவெட்ஸ் அடிக்க அதனை மற்றொரு ஜேர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் கோலை நோக்கி அடிக்க இம்முறை குறுக்கே காலை நீட்டியவர் போத்துகல் வீரர் குயெரியோ, இன்னொரு சேம்சைடு கோல்,. ஜேர்மனி 2-1 என்று முன்னிலை பெற்றது.இடைவேளைக்குப் பிறகு 6 நிமிடங்களில் அதாவது 51வது நிமிடத்தில்  ஜேர்மனி இன்னொரு கோல் அடித்து ஜெர்மனி 3-1. என  முன்னிலை  பெற்றது

59வது நிமிடத்தில் மீண்டும் ஜேர்மனி கோல் அடித்தது. இந்த முறை ஜேர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் வலது புறத்திலிருந்து மிகப்பிரமாதமாக தூக்கி அடித்து ஒரு கிராஸை ராபின் கோசன்ஸுக்கு செய்ய அங்கு கோல் அருகே எம்பிய கோசன்ஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார் 4-1 என்று ஜேர்மனி முன்னிலை. ராபின் கோசன்ஸை போர்ச்சுகல்லினால் ஆட்டம் முழுக்கவுமே ஒன்றும் செய்ய முடியவில்லை. 62வது நிமிடத்தில் அவர் ஆட்டத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார்

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் போத்துலுக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது.   பந்து இன்னொரு முனை கோல் போஸ்ட்டைக் கடந்து சென்ற்து, அங்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தைக் கட்டுப்படுத்தி மீண்டும் கோல் வாசலுக்கு அனுப்பினார். கோல் கீப்பர் நியூயரைக் கடந்துதான் ரொனால்டோ இந்தப் பாசைச் செய்தார், அதனால் ஜோட்டா எளிதாக கோலாக மாற்றினார் ஜேர்மனி 4 போர்ச்சுகல் 2.

குரூப் எஃப்-ல் பிரான்ஸ் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க போர்ச்சுகலை வீழ்த்திய ஜேர்மனி 3 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், போத்துகல் 3 புள்ளிகளுன் 3ம் இடத்திலும்,பிரான்ஸுடனான போட்டியை  சமப்படுத்திய ஹங்கேரி  1 புள்ளியும்   பெற்றுள்ளன.

No comments: