Saturday, June 19, 2021

இங்கிலாந்தை திணறடித்த ஸ்கொட்லாந்து

யூரோ 2020 கிண்ண  குரூப் டி போட்டியில் இங்கிலாந்தைத்  திணறடித்த ஸ்கொட்லாந்து  கோல் எதுவும்  இல்லாது ஆட்டத்தை  சமப்ப‌டுத்தியது.

 பலமான  அணி என  வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்தால் ஸ்கொட்லாந்தின்  தடுப்பணையை  உடைக்க முடியவில்லை.  கோல் அடிப்பதற்கு ஸ்கொட்லாந்துக்கு  அதிக  சந்தர்ப்பம்  கிடைத்தது.அனைத்தும்  வீணாகிவிட்டது. 

இங்கிலாந்து வீரர்கள்  பதற்றமாகவே ஆடினர். ஆனால் ஸ்காட்லாந்துக்கும் அதிர்ஷ்டம் இருந்தது. இங்கிலாந்தின் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில்  பட்டது. 

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஸ்காட்லாந்துக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆண்டி ராபர்ட்ஸனிடமிருந்து பந்தை டியர்னி பெற்றார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸைக் கடந்து பந்தை ஸ்காட் வீரர் ஓடனலுக்கு கொடுத்தார். ஓடனலும் அருமையாக கோலை நோக்கி அடித்தார், ஆனால் அங்கு கோல் கீப்பர் வலது புறம் தாழ்வாக விழுந்து கோல் விழாமல் தடுத்தார். தடுத்த பந்து மீண்டும் வந்த போது சே ஆடம்ஸ் அதனை கோலாக மாற்றத் தவறினார்.

 

5  நிமிடங்களில்  2  கோல்கள்

புகாரெஸ்ட்டில்  நடைபெற்ற யூரோ  கிண்ண‌ பிரிவு சி ஆட்டத்தில் வடக்கு மசடேனியாவுக்கு  எதிராக  விளையாடிய குரோஷியா  2 - 1 கோல்  கணக்கில்  வெற்றி  பெற்றது.

நெதர்லாந்துடனான   முதலாவது  போட்டியில்  தோல்வியடைந்தாலும்  உக்ரேனின் ஆட்டம்  அச்சுறுத்தலாகவே   இருந்தது.உக்ரைன் வீரர்கள் ஆந்த்ரீ யார்மலெங்கோ, ரோமன் யரேம்சுக் ஆகியோர் முறையே 29 மற்றும் 34வது நிமிடங்களில் இடைவேளைக்கு முன்னரே அடித்த  இரன்டு கோல்கள் உக்ரைனுக்கு வெற்றி பெற்று கொடுத்தன.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில், பெரும்பகுதி உக்ரைன் வயிற்றில் மோட்டார் ஓட வைத்த நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி ஒரே கோலை அடித்தார். 

வடக்கு  மசடோனியா வீரர் அவ்ரமோவ்ஸ்கியின் கையில் பந்து பட்டதையடுத்து உக்ரைனுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஸ்லன் மலினோவ்ஸ்கி அடித்தபோது  , வ்டக்கு  மசடோனியா கோல் கீப்பர் அபாரமாகக் கணித்து பிடித்தார்.

வடக்கு  மசடோனியா டோனியா அடித்த ஒரே கோலுமே பெனால்டி கிக் மூலம் வந்ததுதான், ஆனால் உக்ரைன் கோல் கீப்பர் கிரிகரி புஷ்சன் தடுக்க அதனை மீண்டும் நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி கோலுக்குள் தள்ளினார்.

வடக்கு  மசடோனியா அபாரமான‌ ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பயனில்லாமல் போனது. இன்னும் புள்ளிகள் பெறவில்லை. பிரிவு சியில் நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க உக்ரைன் 3 புள்ளிகள் பெற்று 2ம் இடத்திலும் ஆஸ்திரியா 3 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.

இரத்தம்  சொட்ட  சொட்ட  அடிக்கப்பட்ட  கோல்

யூரோ கிண்ண தொடரின் குரூப் டி-யின்    செக். குடியரசு,  குரேஷியா ஆகியனவற்றுக்கிடையேயான   போட்டி  1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. ஆனால் 4 புள்ளிகளுடன் செக். குடியரசு அணி இந்தப் பிரிவில் முதலிடம் வகித்து நாக் அவுட் சுற்று தகுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

 பாட்ரிக் ஷிக் அற்புதமாக ஆடினார், அதனால் அவரை குரேஷிய வீரர்க‌ள் குறிவைத்து முரட்டுத் தனமாக ஆடினர். ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் குரேஷியாவின் கோல் பகுதியில் வலது புறம் மேலே வந்த பந்தைப் பெறுவதில் குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென், செக். வீரர் பாட்ரிக் ஷிக் இருவருமே எம்பினர். அப்போது குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென் உடைய  முழங்கை பாட்ரிக் ஷிக்கின் மூக்கில் பட்டது. இதனால் பாட்ரிக் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

இந்தத் தாக்குதலை குரேஷிய வீரர் வேண்டுமென்றே செய்தார் என‌ பாட்ரிக் ஷிக்  முறையிட்டார். ரீப்ளேயில் லவ்ரென் எம்பி பந்தை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில் முஷ்டியை கொண்டு வந்ததாகவே தெரிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது முழங்கையின் மீது ஷிக் தான் தன் முகத்தைக் கொண்டு சென்று அடி வாங்கியது போல் தெரிந்தது.

ஆனால் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்போது ஸ்பானிய ரெஃப்ரி கார்லோஸ் டெல் செரோ   தொலைக்காட்சி ரீப்ளே முடிவை கேட்டார். உடனே ஸ்பாட் கிக், அதாவது பெனால்டி கிக்கை செக். குடியரசுக்குச் சாதகமாக்கினார்.

பெனால்டி கிக்கையும் ஷிக்தான் அடித்தார். மூக்கில் கொட்டிய ரத்தத்துடன் அவர் பெனால்டி ஷாட்டை இடது காலால் கோலுக்குள் திணித்தார். செக். அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

 இடைவேளையின் போது செக். குடியரசு அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பிறகு குரேஷியா வீரர்கள்  ஆக்ரோசமாக  விளையாடினார்கள்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு 2 நிமிடங்களில் அதாவது 47வது நிமிடத்தில் குரேஷிய வீரர் பெரிசிச் இடது ஓரம் பந்தை எடுத்துக் கொண்டு வேகம் காட்டினார். பிறகு வலதுகாலால் வெட்டி உள்ளுக்குள் நுழைந்தார். அவரை குறிவைத்து தடுக்க நிறுத்தியிருந்த செக். வீரருக்குப் போக்குக் காட்டி அதிவேக ஷாட் ஒன்றை அடித்தார். டாப் கார்னரில் கோல் வலையில் பந்து சிக்கியது. 1-1 என்று ஆட்டம் சமன் ஆனது.

கடந்த 2 உலகக் கிண்ண  போட்டிகள், யூரோ 2016, இப்போது 2021 யூரோ கோப்பை என்று 4 பெரிய  தொடர்களில் கோல்களை அடித்து சாதனை புரிந்தார் குரேஷிய நட்சத்திர வீரர் பெரிசிச்.

மூக்கில் ரத்தம் வர கோல் அடித்த ஷிக் தனது 3வது கோலை இந்த தொடரில் அடித்து முன்னிலையில் உள்ளார். ஷிக் தனது 12 சர்வதேச ஆட்டங்களில் 9 கோல்களை அடித்துள்ளார்.

No comments: