தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3 ஆவது ரி20 போட்டியில் இந்தியா 106 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரைச் சமப்படுத்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. சூரியகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ஓட்டங்கள் எட்டுத்தனர். ரிக்கு சிங் 14 ஓட்டங்கள் எடுத்தார். இருவர் ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தனர். ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேரினர்.
தென் ஆபிரிக்கா 13.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமேஅடித்தது. டேவிட் மில்லர் அதிகபட்ஷமக 35 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1௧) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது அதிரடியாக விளையாடி சதம் விளாசிய கப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
பிறந்த நாளில் குல்தீப் சாதனை
ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளைவீழ்த்தினார். கடைசி
7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் பிறந்தநாளில் மொத்தம் 5 விக்கெட்டுகள்
சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 2.5 ஓவரிலேயே 17 ஓட்டங்கள்
மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் அசத்தினார்
என்றே சொல்லலாம்.
டிசம்பர் 14ஆம் திகதி 29வது பிறந்த நாளை கொண்டாடிய குல்தீய சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி டேவிட் மில்லர் உட்பட
தன்னுடைய கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா மிகப்பெரிய வெற்றியை
பதிவு செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதை விட இதன் வாயிலாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில்
தம்முடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர், சிறந்த பந்து வீச்சைப் (5/17) பதிவு செய்தவர் ஆகிய 2 தனித்துவமான உலக சாதனையையும்
அவர் படைத்துள்ளார்.
இற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் வணிந்து ஹஸரங்கா தனது பிறந்தநாளில் 9 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை
எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. 2018ஆம்
ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 5/24 விக்கெட்களை
எடுத்த குல்தீப் யாதவ் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.
ஜோஹன்ஸ்பர்க், மான்செஸ்டர் ஆகிய இரண்டு வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற டி20 போட்டிகளில் குல்தீப் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 2 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பும்ரா, சஹால் போன்ற யாருமே செய்யாத மாபெரும் சாதனையையும் குல்தீப் யாதவ் படைதுள்ளார்.
மூன்று வருடங்களில் சூரியகுமார் உலக சாதனை
சூரியகுமார்
யாதவ் ரி20 யில் நான்கு சதங்கள் அடித்து ரோஹித்
சர்மா,கிளன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
2007இல் அறிமுகமான ரோஹித் சர்மா
16 வருடங்களில்
140 ஆவது போட்டியில்
4 ஆவது சதத்தை அடித்தார். 2012இல் அறிமுகமான மேக்ஸ்வெல் 11 வருடங்களில் 92 ஆவது போட்டியில் 4 ஆவது சதத்தை அடித்தார். 2021இல்
அறிமுகமான சூரியகுமார் வெறும் 3 வருடங்களுக்குள் 57 ஆவது
போட்டியில் 4 ஆவது சதத்தை அடித்து வியப்பை
ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment