Saturday, December 9, 2023

உலகக்கிண்ண ரி20 மைதானங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்


   அமெரிக்கா, கரீபியன் தீவுகளில்  2024 ஆம் ஆண்டு நடைபெறும்  உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களை  ஆய்வுசெய்யும் பணி  நவம்பர் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.    

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (சிடபிள்யூஐ) பிரதிநிதிகள் அடுத்த ஆண்டு ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கரீபியன் ,அமெரிக்காவில் உள்ள மைதானங்களில் இரண்டாவது ஆய்வைத் தொடங்க  உள்ளனர்.  அரங்குகளின் தயார்நிலை குறித்த இரண்டு வார ஆய்வு நவம்பர் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்று   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி செயல்பாட்டுத் தலைவர் குஷியால் சிங், இரண்டு வாரங்களாக ஆய்வுக் குழு கவனம் செலுத்தி வரும் பகுதிகளை விளக்கினார்.

பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் தயாரிப்புகள், பயிற்சி வசதிகள், வீரர்களின் ஆடை அறைகள், ஒளிபரப்பு மற்றும் ஊடக வசதிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் திறன்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள்... ரசிகர் பூங்காக்களுக்கான பகுதிகள் மற்றும் பிற முக்கிய கூறுகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.   என்று சிங் கூறினார்.

 20 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 55 போட்டிகள் ஜூன் 4 முதல் ஜூன் 30, 2024 வரை நடைபெறும். மேற்கிந்தியத் தீவுகள் ,அமெரிக்கா ஆகியன இணைந்து  முதல் முறையாக ஐசிசி போட்டியை நடத்துகின்றன.

No comments: