ஐபில் 2024 மினி ஏலம் துபாயில் பரபரப்பாக நடந்தது. நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு பல அணிகள் முட்டி மோதின.சர்வதேசப் போடியில் விளையாடவர்கலுக்கான ஏலத்தொகை எகிறியது. ஏலத்தில் வாங்கப்படாத வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஆண்டு ந்நிராகரிக்கப்பட்ட வீரரை வாங்குவதற்கு பலத்த போட்டி நிலவியது. ஐபிஎல் இன் புண்ணியத்தால் சில வீரர்கள் கோடீச்வரரானார்கள்.இறுதிப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டின. இறுதியில் மொத்தமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.இதற்கான 10 அணிகள் சார்பில் மொத்தமாக 230.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 31.35 கோடி செலவிட்டது. இதில் பல வீரர்களுக்கான ஏலத்தொகை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோடீஸ்வரனான பழங்குடியின வீரர்
குஜராத்
மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸை,
குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 கோடிக்கு ஒப்பந்தம்
செய்துள்ளது. அடிப்படை ஏலத்தொகயான 20 லட்ச ரூபாய் பிரிவில்
இருந்த அவரை கைப்பற்ற பல
முன்னணி அணிகளும் தீவிரம் காட்டின.
சென்னை
கூட 1.2 கோடி ரூபாய் வரை
ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியில்
குஜராத் அணி ராபினை ஒப்பந்தம்
செய்தது. இதன் மூலம், ஜார்கண்ட்
மாநிலத்தில் இருந்து ஐபிஎல் தொடரில்
ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் பழங்குடியின வீரர்
என்ற பெருமையை பெற்றார். அதேநேரம், கடந்த ஆண்டு இவர்
ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாதது
குறிப்பிடத்தக்கது.
இடது
கை வீரரான ராபின் மின்ஸ்
பிரமாண்ட ஷாட்களை ஆடுவதில் கைதேர்ந்தவராக
உள்ளார். இடது கை பேட்ஸ்மேன்
ஆன இவர், டோனியின் பரமரசிகராவார்.
டோனியின் வழிகாட்டியான சன்சல் பட்டாச்சார்யா தான்
ராபினுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டத்தைச்
சேர்ந்த மின்ஸ், மும்பை இந்தியன்ஸ்
அணியால் இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்ட போது
பலரது கவனத்தை ஈர்த்தார்.
ஜார்கண்ட் மாநிலத்திற்காக இதுவரை ரஞ்சிடிராபி போட்டியில்
விளையாடியது இல்லை. அதேநேரம், ஜார்கண்ட்டின் u-19 மற்றும் u - 25 அணியின்
கப்டனாக செயல்பட்டுள்ளார்.
ஏலத்தில் ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்து வீச்சாளார்கள்
ஐபிஎல்
மினி ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட
வீரர்களில் பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கைதான்
அதிகமாக உள்ளது. டாப் 5 வீரர்களில்
கூட 4 வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஒருவர் மட்டும்தான் துடுப்பாட்ட
வீரராக உள்ளார்.மிட்ஷெல் ஸ்டார்க்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு
அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார். இவரை
கொல்கத்தா அணி 24.75 கோடிக்கு
வாங்கியுள்ளது. பேட்
கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. நியூசிலாந்து
அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்
டேரில் மிட்ஷெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி 14 கோடிக்கு
வாங்கியுள்ளது. இந்திய
வேகப்பந்து வீச்சாளரானஹர்ஷல் பட்டேலை பஞ்சாப் கிங்ஸ்
அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது. நடந்து முடிந்த மினி
ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்
எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஹர்ஷல்
பட்டேல். அதிக
விலைக்கு ஏலம் போன ஐந்தாவது
வீரராக அல்ஜாரி ஜோசப். இவரை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.50 கோடிக்கு வாங்கியுள்ளது.
நிராகரிக்கப்பட்ட அதிரடி வீரர்
மேற்கு இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஃபில் சால்ட் நான்காவது ரி20 போட்டியிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார்.இங்கிலாந்து அணி சார்பாக ஒரு வீரர் சர்வதேச ரி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசுவது இதுவே முதல் முறை. அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்த இங்கிலாந்து வீரராகவும் சாதனையை நிகழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக இரண்டு ரெஇ20 சதங்களை விளாசிய அதிரடி ஆட்டக்காரரான பில் சால்ட் 1.50 கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலையில் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்றிருந்த வேளையில் அவரை எந்த ஒரு ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்காதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
தவறான வீரரை
வாங்கிய பஞ்சாப்
சஷாங்க்
சிங் என் 32 வயதுதுடுப்பாட்ட வீரரை 20 கோடி
என்ற அடிப்படை விலையில் வாங்கியது பஞ்சாப்.ஆனால், வாங்கிய
சில நிமிடங்களிலேயே, தாங்கள் வாங்க நினைத்த
வீரர் இவர் இல்லை எனவும்,
அதனை மாற்றிக் கொள்ள முடியுமா எனவும்
பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டது
சர்ச்சையானது.
அந்தக்
குறிப்பிட்ட வீரருக்கான ஏலம் நிறைவடைந்துவிட்ட படியால்,
ஏலத்தை மாற்ற முடியாது எனத்
தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணியின் இந்த
நடவடிக்கை இணையத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.
சஷாங்க் சிங் என்ற 19 வயது இளம் வீரரை வாங்கவே தாங்கள் திட்டமிட்டதாகவும், அதே பெயரில் இருந்த வேறு ஒரு வீரரை தவறாக வாங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.ஆனால், புதிதாக வந்த வீரரையும் தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் படேல், ரைலி ரூசௌவ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் உள்ளிட்ட வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.
No comments:
Post a Comment