ஐரோப்பிய கிளப்பில் விளையாடும் 21 வயதுக்குட்பட்ட சிறந்த கால்பந்து வீரருக்கு கோல்டன் போய் விருது வழங்கப்படுகிறது.
20 வயதான அவர், ரியல்
மாட்ரிட் அணிக்காக விளையாடும் சக வீரர் அர்டா குலர் உட்பட 25 பேருடன் போட்டியிட்டு விருதை வென்றுள்ளார்.
அவரது வெற்றியைத் தொடர்ந்து,
பெல்லிங்ஹாம் தனது வாழ்க்கையில் பெரிய இலக்குகளை வைத்திருப்பதாகவும், முடிந்தவரை பல
கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கோல்டன் பாய் விருதுக்கு
முன்னதாக பெல்லிங்ஹாம் கால்பந்து உலகின் பிரபலமான பலோன் டி'ஓர் காலாவில் கோபா டிராபியையும்
வென்றுள்ளார்.
20 வயதான அவர் ரியல் மாட்ரிட்
அணிக்காக தனது முதல் சீசனில் விளையாடி வரும் பெல்லிங்ஹாம் அணிக்காக 15 கோல்களை அடித்து மிகச்சிறந்த தொடக்கத்தைக்
கொடுத்துள்ளார். கோல்டன்போய் விருதை வென்ற
முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்
நேபோலிக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சம்பியன்ஸ்
லீக்கில் அணிக்காக தனது கடைசி கோலை அடித்தார்.
இதில் ரியல் மாட்ரிட்
4 -2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது,
லா லிகாவில் ரியல் மாட்ரிட் அணி தனது டாப் ஃபார்மில் உள்ளது.
15 ஆட்டங்களில் 12ல் வெற்றி பெற்று 38 புள்ளிகளுடன் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது.
No comments:
Post a Comment