இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 ரி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் திகதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் கப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கியது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடந்த 2015இல் தம்முடைய ஐபிஎல் பயணத்தை மும்பையில் துவங்கிய ஹர்திக் பாண்டியா 2020 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமாகி முதன்மை வீரராக உருவெடுத்த பாண்டியா 2021இல் தடுமாறிய போது மும்பை அவரைக் கைவிட்டது. 15 கோடிக்கு பாண்டியாவை வாங்கிய குஜராத அவரை கப்டனாக்கியது.
குஜராத்
அறிமுகமான முதல்
வருடத்தில் முதல்
வருடத்திலேயே சம்பியனாகியது இரண்டாவது
வருடத்தில்இறுதிப் போட்டிவரை குஜராத்தை அழைத்துச் சென்று இந்திய அணியின் கப்டனாகும்
அளவுக்கு முன்னேறினார் பாண்டியா பாண்டியாவின் மீது
மும்பையின் கன்
விழுந்தது.ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா
இருக்கும் போது பாண்டியாவை மும்பை
வலுக்கட்டாயமாக வாங்கியது. அப்போதே
ரோஹித்தைக் கழற்ரிவிட
மும்பை முடிவு செய்தது என்ர செய்தி
பரபரப்பானது.
இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக 2024 சீசன் முதல் ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் 2013இல் கப்டனாக பொறுப்பேற்று 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 5 கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்த ரோஹித் சர்மாவின் கப்டன்ஷிப் பயணம் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதன் காரணமாக சுமார் இரண்டு இலட்சம் ரசிகர்கள் மும்பை அனியில் இருந்து வெளியாரினார்லள்.
ஐபிஎல்
வரகாற்றில் வரலாற்றின்
வெற்றிகரமான கப்டனாக சாதனை
படைத்துள்ளார் ரோஹித். இருப்பினும் 2022, 2023 ஆகிய சீசன்களில்
ரோஹித்தை தலைமையில் மும்பை படுமோசமான தோல்விகளை
சந்தித்தது. மேலும் சமீபத்திய வருடங்களில்
ஐபிஎல் தொடரில் அதிக முறை
டக் அவுட்டாகி ரோகித் ரோஹித்தைசர்மா மோசமான
சாதனை படைத்து சுமாராக செயல்பட்டு
வருகிறார்.
தொலைநோக்கு
பார்வையுடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியா புதிய
கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையில் ரோஹித்
விளையாடுவார் என்றும் மும்பை கூறியுள்ளது.
ஆனாலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்து விராட்
கோலி (4994) டோனிக்கு (4660) பின் அதிக ஓட்டங்கள் அடித்த கப்டனாக சாதனை
படைத்த ரோகித் சர்மாவுக்கு இப்படி
டாட்டா காட்டி பாண்டியாவை புதிய
கப்டனாக அந்த அணி நிர்வாகம்
அறிவித்துள்ளது மும்பை ரசிகர்களிடமே ஏமாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி காயமடையும் பாண்டியாவின் கைகளில்
பொறுப்பை ஒப்படைத்துள்ளது
மும்பை நிர்வாகம்.
No comments:
Post a Comment