அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20யில் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்த ரவி பிஷ்னோய் வெற்றியில் கறுப்பு குதிரையாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். சர்வதேச ரி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரசித் கானை முந்தியுள்ள ரவி பிஷ்னோய் உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராக முன்னேறி பெருமை சேர்த்துள்ளார்.
அவுஸ்திரேலிய தொடரில் தொடர்
நாயகன் விருது வெல்லும் அளவுக்கு அசத்தியதால் 692 புள்ளிகளை பெற்றுள்ள ரசித் கானை முந்தியுள்ள
அவர் தற்போது 699 புள்ளிகளுடன் நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ளது. கடந்த 2020 அண்டர்௧9
உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும்
சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக அறிமுகமானார்.
ரவி பிஷ்னோய் இதுவரை 21 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை 7.50 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். 23 வயதிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
துடுப்பாட்ட தர வரிசையில் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி கண்ட இந்தியா தொடர்ந்து 265 புள்ளிகளுடன் உலகின் நம்பர் வன் ரி20 அணியாக முதலிடத்தில் ஜொலித்து வருகிறது.
No comments:
Post a Comment