Saturday, August 31, 2024

டால்மியா முதல் ஜெய்ஷா வரை ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள்


 ஐசிசி தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தவகையில் டிசம்பர் 1 ஆம் திக‌தி ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார் ஜெய்ஷாஇதன் மூலமாக மிக இளம் வயதிலேயே ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்தவர் என்ற சாதனையை ஜெய் ஷா படைத்திருக்கிறார்.

 கடந்த 27 வருடங்களாக ஐந்து இந்தியர்கள் பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 1997ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்தார். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். கிரிக்கெட் வீரராக அல்லாமல் ஐசிசி தலைவராக அமர்ந்த முதல் நபர் ஜக்மோகன் டால்மியா தான்.

இவரைத்தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஐசிசியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் சரத் பவார். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் அந்த பதவியை அலங்கரித்தார் பவார்.

பின்னர் பிசிசிஐ தலைவராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த என் சீனிவாசன் 2014ஆம் ஆண்டு ஐசிசி தலைவர் பதவிக்கு வந்தார். ஆனால் வருடாந்திர ஆய்வுக் குழுவில் ஸ்ரீனிவாசனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

 ஷஷாங்க் மனோகர் 2016 முதல் 2020 வரை ஐசிசி தலைவராக இருந்தார். இச்சூழலில் தான் தற்போது 5வது இந்தியராக ஜெய்ஷா ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெய்ஷா பேசுகையில், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நான் தாழ்மையுடன் இருக்கிறேன்.கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்க ஐசிசி மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.

பல வடிவங்களின் கிரிக்கெட்டை சமநிலைப்படுத்துவதும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதையும் விட கிரிக்கெட்டை பிரபலமாக்குவதே எங்கள் நோக்கம்"என்று கூறினார்.

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் இலண்டனுக்குச் சென்றார் அண்ணாமலை துணை முதல்வராவாரா உதயநிதி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்

 இலண்டனுக்குச் சென்றார் அண்ணாமலை
துணை முதல்வராவாரா உதயநிதி?
 

தமிழக அரசியலில் பரபலப்பான  பல சம்பவங்கள் கடந்த வாரம் நடைபெற்றனமறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் பொதுப்பணிநெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ..வேலு நூலா எழுதியுள்ளார். கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி  வெளியீட்டு விழா நடைபெற்றது. அங்கு  உரையாற்றிய ரஜினி, திராவிட முன்னேற்றக் கட்சியின் மூத்த  உருப்பீனர்களைப்பற்றிப் பேசியதும் அதற்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்த பதிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் சென்றதை எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன. அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை  இலண்டனுகுச் சென்றுள்ளார். தனக்கு அரசியல் படிபிக்க வேண்டாம் என முழக்கமிட்டவர் அரசியல் படிப்பதற்காக  இலண்டனுக்குச் சென்றதை சமூக வலைத்தளங்கள் வைரலாக்குகின்றன.  ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற வழமையான விவதமும் தமிழகத்தில் பேசு பொருளானது.

புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில் கருணாநிதியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் அமைச்சர் துரைமுருகன்.  மூத்த அமைச்சர்களால் ஸ்டாலினுகுச் சிக்கல், அவதானமாக இருக்க வேண்டும் எனப் பொருள்படப் பேசினார்.

ரஜினியின்  பேச்சை அமைச்சர் துரை முருகன்  ரசிக்கவில்லை பல்லுப் போன பின்பும்  இளம் கதாநாயகிகளைக் கட்டிப்பிடிக்கிறார்கள் என மேடையிலேயே பதிலளித்தார். இப்படி ஒரு பதில்வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.  கூட்டம்  முடிந்ததும்  இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டாலினின் முன்னால் பஞ்சாயத்து நடந்ததாகத் தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் மு ஸ்டாலின் அரசு முறை பயணமாகசென்னையிலிருந்து விமான மூலமாக புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் 17 நாட்கள் தங்கி இருந்து முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசவும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி, புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச இருக்கிறார் முதல்வர். செப்டம்பர் இரண்டாம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் திகதி அயலக தமிழர்களின் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இதன் பின்னர் அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 14ஆம் திகதி சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் டிஆர்பி ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள்  பொன்னாடை போர்த்தி பூங்கொத்துக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.

 இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் Applied materials நிறுவனம் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை செம்மஞ்சேரியில், ரூ.250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இது தவிர சென்னை அடுத்த சிறுசேரியில் ரூ.450 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் Paypal நிறுவன முதலீட்டின் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடப்பட்டிருக்கிறது.


 : கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு இன்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் இந்த ஆலை மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தவிர மதுரை எல்காட் வடபழஞ்சியில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் மையம் அமைகிறது. ரூ.50 கோடியில் அமையும் இந்த மையத்தின் மூலம் 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், "வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது. நவீன உட்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வழமைபோன்று எதிர்க் கட்சிகள் ஸ்டாலினின்  அமெரிக்க விஜயத்தை விமர்சித்து கூறு போடப்போகின்றன.

பாரதீய ஜனதாவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள  சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில்  தொண்டர்கள் உற்சாகமாக அண்ணாமலையை வழியனுப்பி வைத்தனர். மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து படிப்பை மேற்கொள்ளும் அண்ணாமலை காணொளி வாயிலாக கட்சியை கவனித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த  40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இந்த படிப்புக்கான செலவை லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே ஏற்றுள்ளதாம். இதனால்  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை மூன்று மாத கால அரசியல் படிப்பை தொடங்க லண்டன் சென்றுள்ளார்.

அண்ணாமலை லண்டனுக்கு செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு பதிலாக மாற்றுத் தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின்  தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன். எனது சண்டைகள் அறிக்கை மூலம் தொடரும். நான் வெளிநாட்டுக்கு படிக்க சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

 தமிழக அமைச்சரவையில் மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலிலும், சோஷியல் மீடியாக்களிலும், தொலைக்காட்சி  விவாதங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வரும் தலைப்பாக இருந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும். அதோடு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற அறிவிப்பும் வெளியாக உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அமைச்சரவை மாற்றம் குறித்து தனக்கே தகவல் வரவில்லையே என முதல்வர் ஸ்டாலினே பதிலளித்து விட்டார். இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் உள்ளது.

    முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய 17 நாள் சுற்றுப்பயணமாக  அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பி வந்த பிறகு தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி பற்றிய அறிவிப்பும் வெளியாக உள்ளதாம். திமுக ஆட்சி காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதால் இப்போது அவரை துணை முதல்வராக அறிவித்தால் மட்டுமே வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அவர் முன்னிறுத்த முடியும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வி முதல்வர் பதிலளித்திருப்பதால், அமைச்சரவை மாற்றம் உண்மை தான் என்பதை அவரே மறைமுகமாக உறுதி  செய்துள்ளார். அதே போல் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி தகவலும் உண்மை தான் என கட்சி வட்டாரங்களும் கூறி வருகின்றன. உதயநிதி தற்போது இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதோடு சிறப்பு திட்ட செயலாக்கத்தையும் அவர் கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.