உலகக் கிண்ண 32 அணிகள் சுற்றுப் போட்டியில் மொராக்கோவுக்கு எதிராக நெதர்லாந்து விளையாடியபோது 92-வது நிமிடத்தில் மொராக்கோ கோல் அடித்து சமன் செய்தது. கோல் அடித்த கோடி காக்போ, பின்னர் கண்ணீர் விட்டு அழுதார்.
கோல் அடிக்கும் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுவது வழமையானதே. ஆனால், கோட்டி காக்போ தன் சிசுவை இழந்த துயரத்தில் அழுதார். சக வீர்ரர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர்.
தன் சிசுவை இழந்த துயரத்தில் இருந்தபோதே ஆடுகளத்திற்குத் திரும்பிய காக்போவின் உணர்ச்சிப்பூர்வமான கோல், அவரது குறிப்பிடத்தக்க வலிமையைக் காட்டியதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
தன் சிசுவை இழந்த துயரத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, தன் நாட்டிற்காக கோல் அடித்ததன் மூலம், நெதர்லாந்து முன்கள வீரர் கோடி காக்போ உலகக் கிண்ணப் போட்டியில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் ஒன்றை நிகழ்த்தினார்.
காக்போவும் அவரது காதலி நோவா வான் டெர் பிஜும், கர்ப்ப காலத்தில் தங்கள் மகன் எலிஜா ரபேல் காக்போ காலமானதை அறிவித்தனர்.
பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி 16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

No comments:
Post a Comment