உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், ஈக்வடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் தென் அமெரிக்க அணியை வெளியேற்றிய முதல் வட அமெரிக்க அணி என்ற வரலாற்றுச் சாதனையை மெக்சிகோ படைத்துள்ளது. 40 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக்கோப்பை நாக் அவுட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்று இருக்கிறது மெக்சிகோ அணி.
இடியுடன்
கூடிய பலத்த மழையால் இந்தப் போட்டி தொடங்குவது 1 மணி நேரம் தாமதமானது. பின்னர் ஆட்டம்
தொடங்கியதும் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில்
17 வயதான கில்பர்டோ மோரா கோல் அடிக்க முயன்றார். ஈக்வடோர் அணியின் ஜான் யெபோவாவின்
முயற்சி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. பின்னர், ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில்
ராபர்டோ அல்வராடோ கொடுத்த பாஸை பயன்படுத்தி ஜுலியன் குயினோனஸ் முதல் கோல் அடித்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில், குயினோனஸ் கொடுத்த துல்லியமான பாஸை ரவுல்
ஜிமினெஸ் கோலாக மாற்றி மெக்சிகோவை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.
இந்த
உலகக் கிண்ணத் தொடரில் 3 போட்டிகளில் கோல் அடித்த இரண்டாவது மெக்சிகோ வீரர்
என்ற பெருமையை 29 வயதான ஜுலியன் குயினோனஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் 1998-இல் லூயிஸ்
ஹெர்னாண்டஸ் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். இந்தத் தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும்
மெக்சிகோ அணி ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்காமல் (கிளீன் ஷீட்) தடுப்பாட்டத்தில்
மிக வலுவாக உள்ளது.
2006-ஆம்
ஆண்டு சுவிட்சர்லாந்து அணிக்குப் பிறகு, உலகக் கோப்பையின் முதல் 4 போட்டிகளிலும் கோல்
ஏதும் விட்டுக் கொடுக்காத இரண்டாவது அணி மெக்சிகோ ஆகும். அத்துடன் உலகக் கீண்ணத் தொடரில்
கடந்த 15 போட்டிகளின் முதல் பாதியில் மெக்சிகோ அணி ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல்
புதிய சாதனை படைத்துள்ளது.
ஆட்டத்தின்
கூடுதல் நேரத்தில் ஈக்வடோர் வீரர் பியரோ ஹின்காபி, மெக்சிகோவின் சாண்டியாகோ கிமினெஸிடம்
பேசும்போது தனது வாயை மூடிக்கொண்டதற்காக விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பின் சிவப்பு
அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஜூலியன்
குவினோன்ஸ் ஒரு கோல் அடித்தும், ஒரு கோல் அடிக்க உதவிசெய்தார்.

No comments:
Post a Comment