Showing posts with label காங்கோ. Show all posts
Showing posts with label காங்கோ. Show all posts

Thursday, June 18, 2026

அறிமுக அணியிடம் தடுமாறிய போத்துகல்

உலகக்கிண்ண உதைபந்தாட்ட  குரூப் கே பிரிவு லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான காங்கோ குடியரசு பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி 1-1 என்ற கணக்கில்  போட்டியைச் சமப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரரான 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடிக்க முடியாமல் திணறியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 புதன்கிழமைநடைபெற்ற இப்போட்டியில் போத்துகல் வீரர்  ஜோனோ நெவ்ஸ் ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே தலையால் முட்டி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை தந்தார். அண்மையில் காலமான டியாகோ ஜோட்டாவின் நினைவாக கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய நெவ்ஸ், இந்த கோலை அவருக்கு அர்ப்பணித்தார். இருப்பினும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+5வது நிமிடம்) காங்கோ அணியின் யோவான் விசா தலை கிண்ண கோப்பை வரலாற்றில் காங்கோ அணி பெற்ற முதல் கோல் ,முதல் புள்ளி இதுவாகும் .

  இரண்டாவது பாதியில்  போத்துகல் அணி தொடர்ந்து போராடியும் காங்கோ அணியின் பலமான தற்காப்பு அரணை உடைக்க முடியவில்லை. ஜான் கேன்சிலோ அடித்த கோல் ஆஃப் சைடு காரணமாக நடுவர்களால் மறுக்கப்பட்டது.