Monday, May 15, 2023

மருந்து விற்பனைக்கு எதிராக சச்சின் புகார்

 


பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்வது சட்டபடி குற்றம் ஆகும். இந்நிலையில் சமீபகாலங்களில் பிரபலங்களின் பெயர்கள் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்ட அடிக்கடி எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரில் சட்டவிரோதமாக ஹெர்பல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் பெயரைப் பயன்படுத்தி `www.sachinhealth.in' என்ற வெப்சைட் மூலம் ஹெர்பல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த விற்பனைக்கு சச்சின் டெண்டுல்கரிடம் முறைப்படி அனுமதி பெறப்படவில்லை. சச்சின் டெண்டுல்கர் பெயரைப் பயன்படுத்தி சோஷியல் மீடியாவில் விளம்பரமும் செய்யப்பட்டது. உடல், தோல், வலி பிரச்னைகளுக்கான மருந்துகள் அந்த இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதில் முறைகேட்டின் உச்சத்திற்கே செல்வது போல் மருந்துகளை வாங்குபவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்ட டி-சர்ட் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இது சச்சின் டெண்டுல்கரின் உதவியாளர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த சச்சின் கடும் அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சச்சின் தரப்பில் பொலிஸில்  புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

 உடலில் அந்த ஆயிலை ஸ்பிரே செய்வதன் மூலம் உடல் கொழுப்பு கரையும் என்று இரண்டு வெப்சைட்டுகளில் விளம்பரம் செய்தனர். அதன் விலை 899 ரூபாய் என்று நவீன் என்பவர் சோஷியல் மீடியாவில் விளம்பரம் கொடுத்திருந்தார். தனக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், தனது பெயர் பயன்படுத்தப்படுவதாக சச்சின் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: