ஆர்ஜென்ரீனா அணியின் கப்டன் மெஸ்ஸியை முன்னாள் இந்திய வீரர் சச்சின்
டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கருக்கு
உலகக் கிண்ணம் மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும், அவர் விளையாடும்
கடைசி உலகக்கோப்பையின் போது அந்த கனவு நனவானது. தற்போது இதே சூழல் தான் மெஸ்ஸிக்கும்
நடந்தது.இந்தியாவின் 28 வருட உலகக் கிண்ண கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, ஆர்ஜெண்ரீனாவின்
36 வருட கனவு மெஸ்ஸிக்காக நிறைவேறியுள்ளது. தற்போது, அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு,
மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment