Saturday, November 4, 2023

சச்சினை முந்திய ரச்சின் 23 வயதில் புதிய 2 உலக சாதனை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தைல் நடக்கும்  பாகிஸ்தானுக்கு எதிடான  போட்டியில் நியூஸிலாந்தின்  இளம் வீர ரச்சின் ரவீந்திர  புதிய சாதனைகள் படைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

கப்டன் கேன் வில்லியம்ஸ்னுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி  ரச்சின் ரவீந்திர  2வது விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 108 (94)ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். உலகக் கிண்ணத்தில்  முதல் முறையாக விளையாடும் அவர் ஏற்கனவே 2 சதங்கள் அடித்திருந்த அவர் இதையும் சேர்த்து மொத்தம் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில்  அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற   சாதனையை ரச்சின் ரவீந்திர படைத்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில்  கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற மற்றுமொரு சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.

கிளன் டர்னர் (1975) மார்ட்டின் கப்டில் (2015) கேன் வில்லியம்சன் (2019) ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் 24 வயதுக்குள் அதிக சதங்கள் (3) அடித்த வீரர் என்ற இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் உடைத்துள்ள ரச்சின் ரவீந்திர  புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் 24 வயதுக்குள் 2 சதங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

 

No comments: