இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் பேட்டிங் தூணாக பார்க்கப்பட்டு வருபவர் விராட் கோலி என்றால் அது மிகயல்ல இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே எதிர்பாராமல் நடந்த நான்கு ஒற்றுமையான விடயங்களை இந்த பதிவில் காணலாம்.
1) அறிமுக போட்டி ஒரே திகதியில் அமைந்தது :
சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு
டிசம்பர் 18-ஆம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகினார். அதேபோன்று விராட்
கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் திகதி இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார்.
மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அறிமுகமான திகதி ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2) முதல்
டெஸ்ட் சதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக: சச்சின்
டெண்டுல்கர் கடந்த 1992-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான
போட்டியில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதேபோன்று விராட் கோலியும்
கடந்த 2012-ஆம் ஆண்டு அடிலெய்டு நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட்
போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார். இருவருமே அவுஸ்திரேலியா
மண்ணில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்தனர்.
3) ஐபிஎல் தொடரில் கப்டனாக ஒரேஞ்சு தொப்பி:
ச்சின் டெண்டுல்கர் கடந்த 2010-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டனாக அதிக ஒட்டங்களை குவித்து ஒரேஞ்ச் தொப்பையை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியின் கப்டனாக அதிக ஒட்டங்களை குவித்து ஒரேஞ்ச் தொப்பியை கைப்பற்றினாறார்
. 4) கப்டனாக ஒரே அணிக்கு எதிராக அறிமுகமானது :
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக கப்டனாக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலியும் இலங்கை அணிக்கு எதிராகவே ஒருநாள்கப்டனாக அறிமுகமாகினார். சச்சின் 1996-ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமாகினார். 2014-ஆம் ஆண்டு விராட் கோலியும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கப்டனாக அறிமுகமாகியுள்ளார்.
No comments:
Post a Comment