Wednesday, April 13, 2022

பெங்களூருவை தெறிக்கவிட்ட சிங்கப்படை

நவிமும்பை  டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற  ஐபிஎல் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடர்ந்து நான்கு  போட்டிகளிலும் வரிசையாக தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்த சென்னை இந்த போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கியது.    இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட், உத்தப்பா ஆகியோர் களம்  இறங்கினர். ருதுராஜ்  17 (16) ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய மொயின் அலி 3 (8) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தேவையின்றி ரன் அவுட்டானதால் 36/2 என தடுமாறிய சென்னைக்கு மீண்டும் 5-வது தோல்வி உறுதி என அந்த அணி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.  அப்போது களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே, வீரர் ரொபின் உத்தப்பாவுடன் ஜோடி  சென்னையை மீட்டெடுத்தது.

ஆரம்பத்தில் நிதானத்தை காட்டிய இந்த ஜோடி ஒருசில ஓவர்களுக்கு பின் பெங்களூரு பந்துவீச்சாளர்களை அதிரடி சரவெடியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர். நேரம் செல்ல செல்ல பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாத இந்த ஜோடி பவுண்டரிகளை விட சிக்சர்களை அதிகமாக பறக்கவிட்டு மைதானத்தில் ரன் மழை பொழிய தொடங்கினார்கள். அதற்கு ஏற்றார்போல் ஆரம்பத்தில் அற்புதமாக வீசிய பெங்களூர் பவுலர்கள் இவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு சரணடைந்து அதன்பின் ஓட்டங்களை வாரி வழங்கினர்.

பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அதன் கப்டன் டு பிளேஸிஸ் திகைத்துப் போய் நிற்க மறுபுறம் வெளுத்து வாங்கிய இவர்கள் இருவருமே அரைசதம் கடந்து 100 ஓட்டங்கள் எடுத்தனர்.  19-வது ஓவரில் 165 ஓட்டங்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 மெகா சிக்ஸர்கள் உட்பட 88 ஓட்டங்கள் எடுத்த ரொபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து பட்டையைக் கிளப்பிய ஷிவம் துபே கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 இமாலய சிக்சர் உட்பட 95* ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் மிரட்டலான ஆட்டத்தால்10 ஓவர்கலில் 60 ஓட்டங்கள் எடுத்த  சென்னை 20 ஓவர்களில் 216/4 என்ற பெரிய ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடசி ஓவரில் களம் இறங்கிய டோனி ஒரு பந்தைக்கூட சந்திக்கவில்லை. கசரங்க டி சில்வா இரண்டு விக்கெற்களையும், கெசில்வூட்  ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

217 என்ற மெகா இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு இலங்கை பந்துவீச்சாலர்  மகேஷ் தீக்ஷனா ஆரம்பத்திலிருந்தே தொல்லை கொடுத்தார். கப்டன் டு பிளேஸிசை 8 (9) ஓட்டங்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த நட்சத்திரம் விராட் கோலியை முகேஷ் சவுத்திரி 1 ஓட்டத்துடன்  ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத்தை 12 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்த  செய்த தீக்சனா ஆரம்பத்திலேயே போட்டியை சென்னையின் பக்கம் திருப்பினார். இதனால் 42/3 என தடுமாறிய பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 26 (11) ஓட்டங்கள்எடுத்து ஆட்டமிழந்தார்.   50/4 என மீண்டும் தடுமாறிய பெங்களூருவை இளம் வீரர் பிரபு தேசாய் அதிரடியாக 34 (18) ஓட்டங்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினாலும்  தீக்சனா அவரை காலி செய்தார்.

மற்றொரு இளம் வீரர் சபாஷ் அகமது தன் பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரிகள் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்து   ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் சென்னையின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேற இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/9 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பெங்களூரு தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் கப்டன் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.முகேஸ் செளத்திரி, பிராவோ ஆகியோர் தலா  ஒரு விக்கெற்றை வீழ்த்தினர்

மற்றொரு இளம் வீரர் சபாஷ் அகமது தன் பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரிகள் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்து   ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் சென்னையின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேற இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/9 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பெங்களூரு தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் கப்டன் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.முகேஸ் செளத்திரி, பிராவோ ஆகியோர் தலா  ஒரு விக்கெற்றை வீழ்த்தினர். சிவம் டுபே ஆட்ட நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

உத்தப்பா 9, சிவம் டுபே 8 சிக்ஸர்கள் அடித்தனர். சென்னை மூன்றாவது முறையாக 17 சிக்ஸர்கள் அடித்தது. முன்னதாக  2010 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராகவும்,2018 ஆம் அண்டு பெங்களூருவுக்கு எதிராகவும்  தலா 17 சிக்ஸர்கள் அடித்தது.

சிவம் டுபே, உத்தப்பா ஜோடி மூன்றாவது விக்கெற்றில் 165 ஒட்டங்கள் எடுத்தது. முதல் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தது. 22 பந்துகளில் 50 ஓடங்கள் எடுத்தது.

15 ஆவது ரி 20  சீசனில்  மூன்றாவது விக்கெற்றில் 165 ஒட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடி உத்தபா, சிவம் டுபே.  ப்ர்ங்கலூர் வீரர்களான விரட் கோலி, டுபிளஸிஸ்  பஞ்சாபுக்கு எதிராக 118 ஓட்டங்கள். குஜராத் வீரர்களன சிப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி 101 ஓட்டங்கள்.

சென்னை 200 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடியது. மும்பை,டில்லி,பஞ்சாப், பெங்களூரு,கொல்கட்டா ஆகியனவும்  200  போட்டிகலைல் விளையாடின.

No comments: