ரோயல் சலஞ்ச் பெங்களூருவில் கோலி
11 வருடங்கள் , 9 ஐபிஎல் தொடர்கள்
8 வருடங்கள் கப்டன் 140 போட்டிகள்
66 வெற்றிகள், 70 தோல்விகள் வெற்றி சதவீதம் 48%
3 போட்டிகள் சமநிலையானது,
4 போட்டிகளுக்கு முடிவு ஏதும் இல்லை
49% நாணயச்
சுழற்சியில் வெற்றி
50 ஓட்டங்கள் 35
100 ஓட்டங்கள் 5
413 பவுண்டரிகள்
167 சிக்ஸர்கள்
30 சிக்ஸர்கள் 2016 ஆம் ஆண்டு
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, ஆர்சிபி அணியில்
30 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார் விராட் கோலி.
2018-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில்
ஆர்சிபி அணி ரூ.17 கோடிக்கு கோலியைத் தக்கவைத்தது. அந்த சீசனில் கோலி 530 ஓட்டங்கள்
குவித்தார்.
2016 ஆம் ஆண்டு
இறுதிப் போட்டி ஒரேஞ் தொப்பி
2021-ம் ஆண்டு சீசனில் கோலி
ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர்.
2016-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில்
ஆர்சிபி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கோலி 2-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்,
அந்தத் தொடரிலும் 973 ரன்களை 16 போட்டிகளில் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றார்.
அதுமட்டுமல்லாமல் நிரந்தரமாகவே ஆர்சிபி அணிக்காக
2021-ம் ஆண்டு சீசனில் கோலி
ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர்.
சம்பியன் கிண்ணம் கைக்கு எட்டவில்லை.
ஐபிஎல் தொடர் ஆரம்பமானபோது விராட் கோலியை ரோயல் சலஞ்ச் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. 2013 ஆம் ஆண்டு பெங்களூரு அனியின் கப்டனானார் கோலி. எட்டு வருட கப்டன் பயணத்தை கோலி முடிவுக்குக் கொன்டுவந்துள்ளார். மிகச் சிறந்த வீரர், சாதனைகள் பலவற்றை அநாயசகமாக முறியடித்தவர்.சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரர். கப்டன் என்ற பெருமிதத்துடன் சம்பியன் கிண்ணத்தை தூக்கி மகிழ்ச்சியடையாமல் கப்டன் பதவியைத் துறந்துள்ளார்.
இந்திய கிறிக்கெற் அணித் தலைவராக இருக்கும் கோலி
சர்வதேச வெற்றிக் கிண்ணம் எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் அந்த
சோகம் தொடர்கிறது. துடுப்பாட்ட வீரனாக பிரகாசித்து வெற்றியின் உச்சங்கள் பலவற்றைத்
தொட்ட கோலிக்கு சம்பியன் கிண்னங்கள் எவையும் வசமாகவில்லை.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, ஆர்சிபி அணியில்
30 ஆயிரம் டொலருக்கு கோலியை ஏலத்தில் எடுத்தது. 12 போட்டிகளில் விளையாடிய கோலி 165
ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.
2009 ஆம் ஆண்டு கோலியின்
விளையாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டது. 246 ரன்கள் சேர்த்தார். 2010-ம் ஆண்டில்
பெங்களூரு அணியிலேயே 3-வது அதிகபட்சமாக ஓட்டங்கள் சேர்த்த வீரராக கோலி 307 ஓட்டங்கள்
சேர்த்தார்.
2011 ஆம் ஆண்டுபெங்களூரு அனைத்து வீரர்களையும் ஏலத்தில் கழற்றிவிட்டாலும், கோலியை மட்டும் தக்கவைத்தது. விராட் கோலியைத் துணை கப்டனாக நியமித்தது. கப்டன் வெட்டோரிக்குக் காயம் ஏற்பட்டதால், சில போட்டிகளுக்கு கோலி கப்டனாக செயல்பட்டார்.
அப்போது பெங்களுரு அணியின் பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்ஸ், எதிர்காலத்தில்
பெங்களூருக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் கப்டனாக கோலி இருப்பார் எனக் கணித்தார்.
அந்த தொடரில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தார்போல், கோலி 2-வது அதிகபட்ச ஓட்டங்களைச் அடித்த
வீரராக மாறி 557 ஓட்டங்கள் குவித்தார். 2012-ம் ஆண்டு கோலி 364 ஓட்டங்கள் அடித்தார்.
2013் ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து கோலியின் கப்டன் பயணம் தொடங்கியது. அப்போது இருந்து இந்த சீசன் வரை பெங்களூரு அணியின் கப்டனாக கோலி தொடர்கிறார். 2013 ஆம் ஆண்டில் கோலி தலைமையில் பெங்களூரு அணி 5-வது இடத்தைப் பிடித்தது. துடுப்பாட்டத்தில் உச்சத்தில் சென்ற கோலி 634 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். இதில் 6 அரை சதங்கள் அடங்கும்.
அடுத்த ஆண்டு தொடரில் பெங்களூருவின்
மிக மோசமாக விளையாடியதால் 7-வது இடத்தைப் பிடித்தது,
கோலி 359 ஓட்டங்கள் சேர்த்தார். பெங்களூருவின் கதை முடிந்ததென விமர்சனம் எழுந்தபோது 2015-ம் ஆண்டு அணியை தூக்கி நிறுத்தினார் கோலி.அந்தத்
தொடரில் பெங்களூருவை பிளே ஓஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற கோலி 505 ஓட்டங்களை அடித்தார்.
2016-ம் ஆண்டு பெங்களூருவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கோலி 2-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தார், அந்தத் தொடரிலும் 973 ஓட்டங்களை அடித்து ஒரேஞ் தொப்பியையும் வென்றார்.
2017-ம் ஆண்டு தோள்பட்டை வலி காரணாக கோலி பல போட்டிகளில் விளையாடாததால்,
பெங்களூரு சீசனில் கடைசி இடத்தைப் பிடித்தது.
2018-ம் ஆண்டு ரூ.17 கோடிக்கு கோலியைத் தக்கவைத்தது பெங்களூரு. கோலி 530 ஓட்டங்கள் அடித்தார். பெங்களூரு 6-வது
இடத்தைப் பிடித்தது. 2019-ம் ஆண்டுவரை ஐபிஎல்
பிளே ஓஃப் சுற்றுக்கு பெங்களூரு செல்லவில்லை.
2019-ம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ஓட்டங்களை தொட்ட இரண்டாவது வீரரானார். 2020-ம் ஆண்டுபெங்களூரு பிளே ஓஃப் சுற்றுக்கு சென்றது.
2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல்
வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2-வது சுற்று தொடங்கும்
முன் இந்த சீசனோடு கப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.
விராட் கோலியின் ஐபிஎல் கப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஆக்ரோசம்,அச்சுறுதல்,கோபம், வெறுப்பு, அழுத்தம் போன்றவற்றின் மூலம் எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் கோலியை இனிமேல் காணமுடியாது. வெற்றியுடன் போட்டியை முடிக்கவே வீரர்கள் விரும்புவார்கள். கப்டன் பதவியைத் துறக்கும் கோலி நடுவருடன் வாக்குவாதம், தோல்வி, தலையைக் குனிந்தவாறு மைதானத்தை விட்டு வெலியேறினார்.
ஒரே உரிமையாளரின் அணிக்கு அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கப்டன் கோலி.சம்பியன் கிண்ணத்தைத் தொட்டுத் தூக்காமல் வெறுங்கையுடன் கப்டன் பயணத்தை கோலி முடித்தது கோலியின் ரசிகர் அல்லாதவர்களுக்கும் வருத்தமளிக்கக் கூடியதே.ரி20 உலகக்கிண்னத்தை கோலியின் கையில் கொடுப்பதே சக வீரர்கள் கோலிக்குக் கொடுக்கும் கெளரவமாகும்
No comments:
Post a Comment