Sunday, March 17, 2024

பெங்களூரில் தண்ணீர்ப் பஞ்சம் ஐபிஎல் நடத்துவதில் சிக்கல்


 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் என்றால் அது பெங்களூரு மாநகரில் அமைந்துள்ள சின்னச்சாமி மைதானம்தான்.

  பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கோடை காலம் இன்னும் முழுமையாக தொடங்காத நிலையில் பெங்களூரு நகருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது. இப்படியான நிலையில் ஐபிஎல் போட்டியை சின்னச்சாமி மைதானத்தில் நடத்தினால் மைதானத்தினை பாராமரிக்க மட்டுமே தினம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லீற்ற ர் தண்ணீர் தேவைப்படும். இதுவே போட்டி நடக்கும் தினம் என்றால், ரசிகர்களின் பயன்பாட்டிற்கு கூடுதலாக லட்சக்கணக்கான லீற்ற ர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், இதனைக் கருத்தில் கொண்டு, பெங்களூரில் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு விசாகப்பட்டினம் அல்லது கொச்சி மைதானம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணை காலத்திற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விசாகப்பட்டினம் மைதானம் கொடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு அணிக்கு கொச்சி மைதானத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது பெங்களூரு  அணி ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், நிலைமையை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்கத்தொடங்கிவிட்டனர். 

No comments: