மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 152 ஓட்டங்கள் இலக்கை விரட்டிய பெங்களூரு 50/1 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆரம்பத்திலிருந்தே நிதானத்துடனும் அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்து வந்தார்.
9ஆவது ஓவரில் களமிறங்கிய அவர் நிலைத்து நின்று
4 பவுண்டரிகள் உட்பட 48 ஓட்டங்கள் எடுத்து அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததார்.
அத்துடன் தனது அணியை வெற்றியின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்த அவரை இளம் தென்
ஆப்பிரிக்க வீரர் தேவால்ட் பிரேவிஸ் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக பந்துவீசி
எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலியை தடுமாற வைத்துநடுவரிடம் அவுட் கேட்டார். அதை களத்தில்
இருந்த அம்பயர் அவுட் கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி உடனடியாக ரிவியூ செய்தார்.
ஏனெனில் அந்தப் பந்து தனது கால்களில் படாமல் துடுப்பில் பட்டதாக அவர் உணர்ந்தார். அதை தொடர்ந்து அதை 3-வது அம்பயர் சோதித்த போதுதுடுப்பு, கால் ஆகிய இரண்டையுமே பந்து தொடுவதைப் போல அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெரியவந்தது. அந்த நிலையில் வெவ்வேறு திசைகளில் அதை பார்க்க முயற்சித்த அம்பயருக்கு அந்த பந்தை தெளிவாக பார்ப்பதற்கான வாய்ப்பு எந்த திசைகளிலும் கிடைக்கவில்லை. எனவே துடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக எந்தவித ஆதாரமும் கிடைக்காத நிலையில் களத்தில் ஏற்கனவே அம்பயர் அவுட் கொடுத்திருந்த காரணத்தை கையில் எடுத்த 3-வது அம்பயர் மீண்டும் அவுட் கொடுத்தார்.
இதனால்
கடுப்பான விராட் கோலி கோபத்தில் மிகவும் ஆத்திரமடைந்து துடுப்பை விளாசிக்கொண்டே அம்பயரை
திட்டிக்கொண்டே பெவிலியனுக்கு திரும்பினார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய நடுவரை பல ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏனெனில் அந்தப் பந்து முதலில் துடுப்பில் தான் பட்டதாக பெரும்பாலான ரசிகர்கள்
கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இது போன்ற தருணங்களில் துடுப்பிலும் காலிலும் பந்து
படும் பட்சத்தில் துடுப்பில் படுவதாக தான்
நடுவர் எடுத்துக் கொள்ள வேண்டுமென அடிப்படை
கிரிக்கெட் விதிமுறை உள்ளது.
இது
பற்றி எம்சிசி கிரிக்கெட் விதிமுறை 36.2.2 இல் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “ஒரு பேட்டரின்
காலிலும் பேட்டிலும் ஒரே நேரத்தில் பந்து படுகின்ற தருணங்களில் அந்தப் பந்து முதலில்
பேட்டில் படுவதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதி முறையின்
அடிப்படையில் விராட் கோலி நிச்சயமாக அவுட் இல்லை என தெரியவருகிறது. இதனால் இதுபோன்ற
மோசமான அம்பயர்களை ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் எப்படி பிசிசிஐ அனுமதிக்கிறது என்று
நிறைய ரசிகர்கள் கேட்கின்றனர்.
இந்த விதிமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு அம்பயரை சாடியுள்ளது. அத்துடன் இதைவிட சிறந்த அம்பயர்கள் எங்கள் நாட்டில் உள்ளதால் உங்களுக்கு வேண்டுமெனில் அனுப்ப தயார் என ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கலாய்த்துள்ளது.
No comments:
Post a Comment