Friday, April 24, 2009

திரைக்குவராதசங்கதி 9


திரை உலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன். திரைப்படத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக வித்தியாசமான முறையில் விளம்பரங்களை வெளியிட்டவர். ஜெமினி ஸ்டூடியோவின் வித்தியாசமான விளம்பரத்துக்கு காரணமானவர் பி.பி.நம்பியார்.
1948 ஆம் ஆண்டு ஜெமினி நிறுவனம் தயாரித்த சந்திரலேகா தமிழிலும், ஹிந்தியிலும் பெரு வெற்றி பெற்றது. அந்தக் காலத்தில் சந்திரலேகா படத்தை தயாரிக்க 40 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டது. விளம்பரத்துக்காக மட்டும் ஏழு இலட்சம் ரூபா செலவானது. சந்திரலேகா படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தவர்கள் பி.பி.நம்பியார் கொடுத்த ஆலோசனையால் கவரப்பட்ட எஸ்.எஸ். வாசன், அந்த இளைஞருக்கு ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பெற்றுக் கொடுத்தார்.
சந்திரலேகா நாயகியான ராஜகுமாரியின் தலையை மட்டும் 60 அடி உயரத்தில் கட் அவுட்டாக வரைந்து பம்பாயில் சந்திரலேகா படம் வெளியான தியேட்டர்களின் வாசலில் வைத்து அசத்தினார் எஸ்.எஸ். வாசன். கல்கத்தாவில் முதன் முதலாக மின்சாரக் கம்பங்களில் திரைப்பட விளம்பரங்களை தொங்கவிட்டார்.
வாழ்க்கை படகு படம் ஹிந்தியில் ஜிந்தகி எனும் பெயரில் வெளியானது. வாழ்க்கைப் படகு படத்தின் வெளியீட்டு விழாவுக்காக ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசன் கல்கத்தாவுக்கு சென்றார். கல்கத்தா தியேட்டர் ஒன்றில் சத்திய ஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டிருந்தது.
வாசனைக் கண்ட தியேட்டர் முகாøமயாளர் புதிய இளைஞரின்ஆர்ட் பிலிம் ஓடுகிறது கூட்டமே இல்லை.நீங்கள் விரும்பினால் அந்தப் படத்தை நிறுத்தி விட்டு ஜிந்ததியை வெளியிடலாம் என்றார்.
எஸ்.எஸ். வாசன் பதில் கூறவில்லை. இரவு பதேர் பாஞ்சாலி படத்தைப் பார்த்தார் அந்தப்படத்தின் தாக்கம் அவருடைய மனதைப் பாதித்தது. அருமையான அந்த படத்தைத் தியேட்டரில் இருந்து தூக்க அவருக்கு மனம் வரவில்லை. தியேட்டர் முகாமையாளரிடம் சத்திய ஜித்ரேயின் விலாசத்தைப் பெற்று சத்திய ஜித்ரேயின் வீட்டிற்குச் சென்று அவரை வாழ்த்தினார். தியேட்டர் முகாமையாளர் நொந்து கொண்ட பதேர்பாஞ்சாலி என்ற அப்படம் தான் ஒஸ்கார் விருது பெற்று சத்திய ஜித்ரேக்கு புகழைப் பெற்றுக்கொடுத்தது.
ஆனந்த விகடனின் வெளியான தில்லானா மோகனாம்பாளை திரைப்படமாக்கவிரும்பிய இயக்குனர் ஏ,பி. நாகராஜன் ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.எஸ். வாசனைச் சந்தித்து தில்லானா மோகனம்பாள் கதையின் உரிமையை வாங்கி விட்டு அதற்குரிய தொகையைக் கொடுத்தார். தில்லானா மோகனாம்பாள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது அடுத்த ஆனந்த விகடன் எப்போ வரும் என்று இலட்சக் கணக்கான வாசகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தில்லானா மோகனம்பாளையும் நாதஸ்வரவித்துவான் சண்முகசுந்தரத்தையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். கொத்தமங்கலம் சுப்பு இலட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்து படித்த தில்லானா மோகனம்மாள் என்ற நாவலை உருவாக்கிய கொத்தமங்கலம் சுப்புவுக்கும் பணம் கொடுக்கவேண்டும் என்று நினைத்த இயக்குநர் ஏ.பி. நாகராஜன்கொத்தமங்கலம்சுப்புவின் வீட்டிற்குச் சென்று விபரத்தைக் கூறினார்.

ஏ.பி.நாகராஜன் முந்திக்கொண்டு எஸ்.எஸ். வாசன் கொத்தமங்கலம்சுப்புவின் வீட்டிற்குச் சென்று தில்லானா மோகனம்பாள் நாவலின் உரிமைக்காக ஏ..பி.நாகராஜன் கொடுத்த முழுத்தொகையையும் கொடுத்துவிட்டதை அறிந்து ஏ.பி.நாகராஜன் நெகிழ்ந்து விட்டார்.

ரமணி

மித்திரன் 19/04/2004

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சந்திரலேகா நாயகியான ராஜகுமாரியின் தலையை மட்டும் 60 அடி உயரத்தில் கட் அவுட்டாக வரைந்து பம்பாயில் சந்திரலேகா படம் வெளியான தியேட்டர்களின் வாசலில் வைத்து அசத்தினார் எஸ்.எஸ். வாசன்.//


என்ன அநியாயம் அதில் நாயகன் எம்.கே. ராதாவும், ரஞ்சனும் உயிரைக் கொடுத்து நடித்து இருப்பார்கள்