Tuesday, April 21, 2009

கொல்கத்தாவை வீழ்த்தியதுடொக்கான் சார்ஜர்ஸ் அணி



கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்கிடையே கேப்ரவுணில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் எட்டு விக்கெட்டினால் வெற்றி பெற்றது.
நாணயச் சூழ்ச்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைற் ரைடர்ஸ் களத்தடு ப்பை தேர்வு செய்தது.
பயிற்சியாளர் புக்கானுக்கும் அணித்தலைவர் கங்குலிக்குமிடையிலான பிரச்சினை உச்சகட்டமடைந்ததால் மக்கலம் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மக்கலம், கைல்ஸ் ஆகிய இருவரும் ஏமாற்றினார்கள். ஆர்.பி. சிங்கின் பந்தை கில்கிரிஸ்சிடம் பிடிகொடுத்து ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் மக் கலம்.
12 பந்துகளுக்கு முகம்கொடுத்த கைல்ஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 10 ஓட்டங்கள் எடுத்து ஆர்.பி.சிங்கின் பந்தை ஹமிட்டிடம் பிடிகொடுத்து ஆட்மிழந்தார். முன்னாள் அணித்தலைவர் கங்குலி 12 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரே ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
சோப்ரா 11, சுக்லா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பிராட்ஹட்ஜ் ஓரளவு தாக்குபிடித்து 31 ஓட்டங்கள் எடுத்தார். முரளி கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.
3.4 ஓவர்கள் பந்து வீசிய ஆர்.பி.சிங் 22 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓஜா, ஸ்ரைட் ரஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஹமித் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
102ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் 13.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணித்தலைவர் கில் கிறிஸ்ட் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
10 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி மூலம் 10 ஓட்டங்கள் எடுத்த லக்ஷ்மண் ரன் அவுட் முறையில் ஆட்ட மிழந்தார். கிப்ஸ், ரோகித் சர்மா ஜோடி டெக்கான் சார்ஜர்ஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 28 பந்துகளைச் சந்தித்த கிப்ஸ் ஒரு சிக்ஸர், ஐந்து பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
37 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரோகித் சர்மா இரண்டு சிக்ஸர் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார். ஆர்.பி.சி. ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
வானதி


பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி

கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லிடேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே கேப்டவுணில் நடைபெற்ற மூன்றாவது ஐ.பி.எல். டுவென்டி 20 போட்டியின் போது மழை குழப்பியதால் டெல்லி அணி 10 விக்கெட்டால் வெற்றி பெற்றது.
மழை காரணமாக 1 3/4 மணி நேரம் தாமதமாக போட்டி ஆரம்பமானதால் 12 ஓவர்கள் விளையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டோர் டெவில்ஸ் களத் தடுப்பைச் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 104 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரவி போபராவும் கரன்கோயலும் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
22 வயதான கரன் கோயலின் ஆட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. யோமகேஷ் வீசிய பந்தை கரன் கோயல் அடித்தபோது அது மைதானத்துக்கு
வெளியே சென்று வீழ்ந்தது.
இவர்கள் இருவரும் இணைந்து 5.6 ஓவர்களில் 67 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த ஜோடியை மகேஷ் பிரித்தார். 21 பந்துகளில் மூன்று சிக்ஸர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் எடுத்த கோயல், யோமகேஷின் பந்தை வெட்டோரியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வெட்டோரி கட்டுப்படுத்தினார். வெட்டோரி முதலாவது ஓவரின் ரவிபோபராவை எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். 16 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரவி போபரா இரண்டு சிக்ஸர்கள் அடங்
கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார். 19, 21 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போபராவின் பிடியை டெல்லி அணி வீரர்கள் தவறவிட்டனர். வெட்டோரியின் இரண்டாவது ஓவரில் எட்டு ஓட்டங்கள் எடுத்திருந்த சங்ககார ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ஆறு ஒட்டங்கள் எடுத்த
மஹேல ஆட்டமிழந்தார். அணி தலைவர் யுவராஜ் சிங் 11 ஓவர்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சௌலாவும் ரன் அவுட் முறையில் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். 12 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்த பஞ்சாப் 104 ஓட்டங்கள் எடுத்தது.
மூன்று ஓவர்கள் பந்து வீசிய வெட்டோரி 15 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். யோகேஷ் சால்வி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
105 ஓட்ட எண்ணிக்கையுடன் களமிறங்கிய டெல்லி டேர் டெவில்ஸ் 4.5 ஓவர்களில் விக்öகட் இழப்பின்றி 58 ஓட்டங்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 10 விக்öகட்டுகளினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஷெவாக் கம்பீர் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். 1.5 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது.
டக்வேர்ட் லூயிஸ் முறைப்படி ஆறு ஓவர்களில் 54 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 25 பந்துகளில் 30 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய ஷொவாக்கும் கம்பீரும் 4.5 ஓவர்களில் 58 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைத் தேடிக் கொடுத்தனர்.
கம்பீர் 15 ஓட்டங்களையும் ஷெவாக் 38 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக வெட்டோரி தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி

1 comment:

Anonymous said...

you still follow the IPL after they showed their true colors?

they are playing for money and by providing any coverage to what they do, we are becoming an unwilling party to it

Let us stop watching / following them..

--anvarsha