Monday, April 27, 2009
மூன்றாவதுவெற்றியை பெற்றது டொக்கான் சார்ஜஸ்
டேர்பனில் நடைபெற்ற ஐ.பி.எல். டுவென்ரி20 போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜஸ் 12 ஓட்டங்களினால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கில்கிறிஸ்டும் கிப்ஸும் தமது அதிரடியால் மும்பை அணி வீரர்களின் பந்துகளை விளாசினர்.
20 பந்துகளில் மூன்று சிக்ஸர், மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங் கள் எடுத்த கில்கிரிஸ்ட் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 6.5 ஓவர்களில் 63 ஓட்டங்கள் எடுத்தனர்.
கிப்ஸ், ஸ்மித் ஜோடி இணைந்து ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தியது. 22 பந்துகளில் இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 35 ஓட்டங்களை எடுத்து ஸ்மித் ஜயசூரியவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். லக்ஷ்மன் ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.
டெக்கான் அணி வீரர்கள் வரிசையாக வெளியேற தனது அதிரடியை வெளிக்காட்டிய கிப்ஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 44 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர், ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடு த்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒன்றை ஓட்டங்க ளுடன் வெளியேறினர். 20 ஓவர்களில் ஹைதராபாத் டெக்கான் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.
மாலிங்க 19 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் பிராவோ 34 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஹர்பஜன், ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மும்பை வீரர்கள் 14 ஓட்டங்களை உதிரிகளாக விட்டுக் கொடு த்தனர். மும்பை அணியின் தோல்விக்கு அதிக உதிரிகளும் காரணமாயின.
மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் ஏழு விக்öகட்டுகளை இழ ந்து 156 ஓட்டங்களை எடுத்தது.
இரண்டாவது ஓவரிலேயே மும்பை அணி ஜயசூரியவை இழந்தது. ஹர்பஜனின் பந்தை கில்கிறிஸ்டிடம் பிடி கொடுத்த ஜயசூரிய 90 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டெண்டுல்கர், டுமினி ஜோடி மும்பை அணிக்கு உற்சாகமூட்டியது. 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 84 ஓட்டங்கள் எடுத்தது மும்பை அணி. டெக்கானை வீழ்த்தி மும்பை வெற்றி பெறும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்த போது பந்து வீசிய ஓஜா மும்பையின் கனவைத் தகர்த்து ஹைதராபாத் டெக்கானுக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். 27 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர், மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 36ஓட்டங்கள் எடுத்த டெண்டுல்கர் ஓஜாவின் பந்தை கிப்ஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்று ஓட்டங்களுடன் தவானையும் வெளியேறினார் ஓஜா. 40 பந்துகளைச் சந்தித்து டுமினி இரண்டு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் போட்டியில் கதகளி ஆடி வெற் றியைத் தேடிக் கொடுத்த அபிஷேக் நாயர் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிராவோ, ஹர்பஜன் ஜோடி வெற்றியை நோக்கி முனைப்புடன் விளையாடியது. பிராவோ 21 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். எட்டு பந்துகளைச் சந்தித்த ஹர்பஜன் இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தபோது ஆர்.பி. சிங்கின் பந்தை ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்பஜன் ஆட்டமிழந்ததும் ஹைதராபாத் டெக்கான் அணியின் வெற்றி உறுதியானது.
20 ஓவர் முடிவில் மும்பை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.
ஓஜா மூன்று விக்கட்டுகளையும் எட்வேட், ஆர்.பி. சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஓஜா தெரிவு செய்யப்பட்டார்.
ஹைதராபாத் டெக்கான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள் ளது. கொல்கத்தாவை எட்டு விக்கெட்டுகளினாலும் பெங்களூர் ரோய ல்ஸை 24 ஓட்டங்களினாலும் டெக்கான் அணி வீழ்த்தியது.
கடந்த ஐ.பி.எல். போட்டியின் கடைசி மூன்று போட்டிகளிலும் டெக்கான் தோல்வியடைந்தது.
மும்பை அணிக்கு இது முதல் தோல்வி. சென்னை அணியை 19 ஓட்டங்களினால் வீழ்த்தியது மும்பை அணி. ராஜஸ்தான் ரோயல்ஸுடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு இரண்டு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ரமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment