Thursday, April 23, 2009

மழையால் பாதிக்கப்பட்ட பிரித்தி ஜிந்தா



பிரபல நடிகையான பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் துடி பஞ்சாப் அணி இரண்டாவது போட்டியிலும் மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியடைந்தது. டில்லி டேர்டெவில்ஸுடனான போட்டியில் மழை காரணமாக 10 ஓட்டங்களினால் தோல்வியடைந்த பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
டெக்கான் சார்ஜஸிடம் 8 விக்கெட்டுகளினால் தோல்வியடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலாவது வெற்றியைப் பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
ரவி போபராவும் கரன் கோயலும் களமிறங்கினர். கொல்கத்தா அணி ஒன்பது ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இர்ஷாந்தின் பந்தை கைல்ஸிடம் பிடி கொடுத்து கரன் கோயல் ஓட்டமெதுவும் இன் றி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய இர்பான் பதான் அதிரடி காட்டினார். 17 பந்துகளைச் சந்தித்த இர்பான் பதான் ஒரு சிக்ஸர் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கங்குலியின் பந்தை முரளி கார்த்திக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ரவி போபராவுடன் சங்கக்கார இணைந்து விளையாடினார்.
15 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 15 ஓட்டங்கள் எடுத்திருந்த ரவி போபரா கங்குலியின் பந்தை அணித் தலைவர் மக்கலமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சங்கக்கார, யுவராஜ் சிங் ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கைய உயர்த்தியது. சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
24 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்தார்.
யுவராஜுடன் இணை ந்த மஹேலவும் ஜயவர்த்தனவும் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். 28 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங் இரண்டு சிக்ஸர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் எடுத்தார்.
கிங்ஸ் பஞ்சாப்துடி அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல ஆட்டமிழக்காது 19 பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பௌன்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.
கங்குலி இரண்டு விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா, டின்டா, ஹெரி கியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்öகட்டையும் கைப்பற்றினர்.
அணித்தலைவர் மக்கலமும் மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெயிஸ்ஸும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். மழை பெய்யும் சூழ்நிலை இருந்ததனால் இருவரும் இணைந்து அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர்.
கைல்ஸ் இரண்டு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கரன் கோயல் பிடியைத் தவறவிட்டார். இவர்கள் இருவரும் இணைந்து 6.3 ஓவர்களில் 57 ஓட்டங்கள் எடுத்தனர். 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடங்கலாக 21 ஓட்டங்கள் எடுத்த மக்கலம் ஆட்டமிழந்தார்.
கெயில்ஸ் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மட்டையில் பட்டு சென்ற பந்தை சங்கக்கார தவறவிட்டதால் இரண்டாவது முறை கண்டத்தில் இருந்து தப்பினார்.
9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 79 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
மழை தொடர்ந்ததனால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 9.2 ஓவர்களில் கொல்கத்தா அணி 69 ஓட்டங்கள் எடுத்திருந்ததால் வெற்றி பெற போதுமானதாக இருந்தது. கொல்கத்தா அணி 79 ஓட்டங்கள் எடுத்திருந்ததால் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக கைல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி

No comments: