Tuesday, July 31, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 39



ஏழைப் பெண்ணின் அழகில் மயங்கிய அரசர் அவளை திருமணம் செய்ய விரும்புகிறான். மன்னனை மணக்க ஏழைப் பெண் மறுக்கிறாள். அவளை பலாத்காரமாகத் திருமணம் செய்த மன்னன் உன்னுடன் தாம்பத்திய உறவு வைக்கமாட்டேன், சிறையில் வைத்து சித்திரைவதைசெய்வேன் என்கிறான். சிறையில் அடைபட்ட பெண் அதற்கும் கலங்காது உனக்கு தெரியாமல் உன்னுடன் தாம்பத்திய உறவு கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்து அவன் மூலம் உன்னை பழிவாங்குவேன் என்று சபதம் செய்கிறாள்.
1943 ஆம் ஆண்டு வெளியான "மங்கம்மா சபதம்' என்ற படத்தில் மன்னனை மயக்கும் கழைக்கூத்தாடி வேடத்தில் நடித்த வசுந்தரா தேவி மன்னனை மட்டுமல்லாது அன்றைய இளைஞர்களையும் தனது கவர்ச்சியில் மயக்கினாள்.
பெண்பித்துப் பிடித்த அரசனான ரஞ்சன். ஏழைப்பெண்ணான வசுந்தரா தேவியின் அழகில் மயங்கி அவளை தன் படுக்கைக்கு அழைக்கிறான். வசுந்தராதேவி ரஞ்சனின் இச்சைக்கு இணங்க மறுக்கிறார். கோபமடைந்த ரஞ்சன் கட்டாயத் திருமணம் செய்து வசுந்தரா தேவியைச் சிறையிலடைக்கிறார். "உன்னைத் திருமணம் செய்தேனே தவிர உன்னுடன் குடும்பம் நடத்த மாட்டேன்' என்கிறார் ரஞ்சன். உனக்குத் தெரியாது உன்னுடன் தாம்பத்திய உறவு கொண்டு ஆண்மகவை பெற்றெடுத்து உன்னைப் பழி வாங்குவேன்' என்கிறாள் வசுந்தராதேவி.
சிறையிலிருந்து ”ரங்க வழியாக தப்பிய வசுந்தராதேவி கலைக் கலைக்கூத்தாடியாக மன்னன் முன்தோன்றுகிறார். கழைக் கூத்தாடியாக வ”ந்தரா @தவியின் அழகில் மயங்கிய மன்னன் ரஞ்Œன் மன்மத வலையை வீ”கிறார். எல்லாப் பெண்களும் மயங்குவது போல் தானும் மயங்கியது போல் மன்னனின் இச்சைக்கு இணங்குகிறாள் வசுந்தரா தேவி ஏழைக்கூத்தாடி தன் வலையில் வீழ்ந்துவிட்டதாக மன்னன் நினைக்கிறார். உண்மையிலேயே ஏழைக்கூத்தாடியான வசுந்தராதேவியின் வலையில்தான் மன்னன் ரஞ்சன் விழுந்தார். ஏழை கூத்தாடி தான் தனது முதல் மனைவி மங்கம்மாவான வசுந்தராதேவி என்று தெரியாது அவருடன் பழகுகிறார் மன்னன்.
வசுந்தராதேவியின் வயிற்றில் உருவான மகன் வளர்ந்து தந்தையைப் பழிவாங்கி தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறார். உண்மை தெரிந்த ரஞ்சன் மனைவியையும் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.
தந்தை  மகன் என இரு வேடங்களில் ரஞ்சன் நடித்தார். மங்கம்மாவாகவும் ஏழை கூத்தாடியாகவும் நடித்து ரசிகர்களின் மனதைக் கிறங்க வைத்தார் வசுந்தராதேவி. என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடியாக நடித்த முதல் படம் மங்கம்மா சபதம்.
கழைக்கூத்தாடியாக நடித்த என்.எஸ்.கிருஷ்ணன் கயிற்றில் தொங்குவது, நடப்பது போன்ற பயிற்சிகளைப் பெற்ற பின்பே படப்பிடிப்பில் நடித்தார்.
ஒளிப்பதிவு கே.ராம்நாத், கலை ஏ.ஜே.சேகர், இசை எம்.டி.பார்த்தசாரதி, ரா@ஜஸ்வரராவ் பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு, தயாரிப்பு ஜெமினி எஸ்.எஸ். வாசன். இயக்கம் ஆச்சார்யா.
 ரமணி
மித்திரன்29/08/12

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தக்கால ஞாபகம் வந்தது..

உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா