Thursday, August 9, 2012

ஓய்வு பெறுகிறார் தங்கமகன்


ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 22 பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்ட வாழ் நாள் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்பஸ்  நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 4x100 மீற்றர் அஞ்சல் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அமெரிக்க வீரரான மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை  பதினெ ட்டு (18) தங்கப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் இருபத்தியிரண்டு (22) பதக்கங்கங்களை பெற்றுள்ள இவர். நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடைபெற்றிருந்த ஒலிம்பிக் போட்டியில் 200 மீற்றர் பட்டர் பிளை நீச்சல் போட்டியில் 5ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த 27 வயதான பெல்ப்ஸ் எதென்ஸ் நகரில் இடம் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண் கலப் பதக்கங்களையும் சீனத்  தலை நகர் பீஜிங்கில் கடந்த  2008 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த  எட்டு தங்கப் பதக்கங்களையும் தன தாக்கிக் கொண்டார்.


சிட்னியில்  விளையாடியதன்  பின்னர் மிகவும் மோசமான பெறுபேற்றை அவர்  லண்டன் 2012 ஒலிம்பிக்கில் 400 மீற்றர்  தனி நபர் கலப்பு நீச்சல் போட்டியில்  சரியான முறையில் ஆரம்பிக்க தவறியதால் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  அத்துடன், 200 மீற்றர் பட்டர் ஃபிளை நீச்சல் போட்டியிலும் இலக்குச் சுவருக்குள் சரியான முறையில் ஊர்ந்து செல்லத் தவறியதால் அது தென்னாபிரிக்க வீரர் தங்கப் பதக்கம் வென்றிட வழிசமைத்தது. ஆயினும், போல்டி மோர்  நீச்சல்வீரரான பெல்ப்ஸ், தனது நாட்டவரான ரயன் லொக் டெயை  ஓரங் கட்டி 100 மீற்றர் பட்டர் பிளை மற்றும் 200 மீற்றர் கலப்பு நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றதுடன், 4x200 மீற்றர், 4x100 மீற்றர் நீச்சல் போட்டிகளிலும் பதக்கங்களைவென்றார். இத்தகைய சாதனைகளுக்காக  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவருடன் தொலைபேசி மூலமும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.  அத்துடன்  தலைவர் ஜூலியோ  மக்லய னால் வீரர் பெல்ப் ஸுக்கு  நேற்று  முன்தினம் வழங்கப்பட்ட "Fina"  வாழ்நாள் சாதனை விருதில், "ஒலிம்பிக்கின் வாழ் நாள் சாதனை வீரர் மைக்கல் பெல் ப்ஸ் அவர்களுக்கு  ""Fina" ஓகஸ்ட் 4, 2012, லண்டன் பிரித்தானியா' என்ற வாசகங்கள்  பொறிக்கப்பட்டிருந்தன.  



தனது இறுதிப் போட்டியின் பின்னர், ஊடகவியலாளர் மாநாடொன்றில்  கருத்து வெளியிட்ட பெல்ப்ஸ் "ஒலிம்பிக்கின் வாழ்நாள் சாதனையாளர் நானே' என்ற வாசகங்களைக் கொண்டுள்ள  தெய்வீகத் தன்மை வாய்ந்த அதிர்ஷ்ட வசமான இந்த வெற்றிக் கிண்ணத்தை பார்க்கையில் நான் பரவச மடைகின்றேன். தனது  நீச்சல் போட்டித் துறையில் சாதனை படைத்துள்ள மைக்கல் ஜோர்டானை நான் பெரிதும் மதிக்கின்றேன்.  அவரது பேருதவியினாலேயே நான் இன்று வாழ் நாள் அதி சிறந்த நீச்சல் வீரராக வந்துள்ளேன். நான் அவருக்கு நன்றி கூறினேன். அப்போது அவர், அப்படிச் சொல்வது நல்லதல்ல. நீங்கள் தானே நீச்சல் தடாகத்தில் இருந்தீர்கள்' என்றார். நான் திருப்பி அவரிடம் எது நல்ல தல்ல எனக் கேட்டேன். எனது அந்த நீச்சல் கண்ணாடிகளூடே ஆனந்தக் கண்ணீரை நான் வடிக்கிறேன். ஆனால் உங்கள் ஆனந்தக் கண்ணீரோ உங்கள் முகத்தில் வழிந் தோடுகிறதே. என்றேன். அவர்  இல்லாமல் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். அவரைப் போன்று ஒருவர் எனக்கு கிடைத்ததற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகின்றேன் என கண்கள் பனித்த நிலையில் தெரிவித்தார்.

நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவது பற்றி அவர் குறிப்பிடுகையில்...  முப்பது வயதுக்குப் பின்னர் நான் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை. அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின்போது. நான் முப்பது வயதைக்கடந்து விடுவேன். நான் எதை சாதிக்க வேண்டுமென விரும்பினேனோ அதை சாதித்துக் காட்டி விட்டேன்.
எனதுபயிற்சியாளர் பொப் போவ் மானுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் என்னால் செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்வடைகின்றேன் என்றார்...

மெட்ரோநியூஸ்07/08/12


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா