தமிழ்த்திரைப்படங்களில்
பிரிக்கமுடியாத அங்கமாக பாடல்கள் விளங்குகின்றன.
இராகத்துடன் பாடும் திறன் உள்ளவர்கள்
மட்டுமே ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில்
நடித்தார்கள். நாடகமேடை அனுபவம் சிலருக்கு கைகொடுத்தது.
30 சங்கீதம் உள்ள படம் என்று
விளம்பரம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
கர்நாடக
சங்கீதம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பக்திப்பாடல்கள் திரை படப்பாடல்களாக அக்கால
ரசிகர்களை கவர்ந்தன. காலமாற்றத்தால் சங்கப்பாடல்கள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் எல்லாம் திரைப்படப்பாடல்களின் வரிகளாயின. கவர்ச்சிக்காக
கபரே டான்ஸ் பாடல்கள், ஆங்கிலச்சொற்கள்
பாடல்களுக்குள் புகுத்தப்பட்டன. இவற்றுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.
தமிழ்த்திரைப்படப்பாடல்களில்
இலக்கியத்தரம் உள்ளதா? என்ற பட்டிமன்றம்
ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் ஒரு சில
கவிஞர்கள் இலக்கியத்தரத்துடன் எழுதுகிறார்கள். நவீன தொழில்நுட்ப சொற்களை
திரைப்படப்பாடல்களில் உலவவிடுவதில் மதன் கார்க்கி முன்னிலை
வகிக்கிறார்.
இயந்திர
மனிதனுக்கு காதல் வந்தால் எவ்வாறு
இருக்கும் என்ற வித்தியாசமான சங்கரின்
கற்பனைக்கு ‘இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ’
என்று தனது வரிகள் மூலம்
உயிரோட்டம் வழங்கியவர் தான் பாடலாசிரியர் மதன்கார்க்கி.
வைரமுத்துவின்
புதல்வர் தான் மதன்காரக்;கி.
34 வயதுடைய இவர் 2001 ஆம் ஆண்டு அண்ணா
பல்கலைக்கழகத்தில் கணிணி பொறியியல் பட்டம்பெற்று
பின்பு அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் மேல் பட்டப்படிப்பை முடித்தார்.
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப்
பேராசிரியராக பணிபுரிகிறார்.
கடந்த
2009 ஆம் ஆண்டு திரைப்படப் பாடல்களுக்கு
வரிகள் எழுத ஆரம்பித்தார் மதன்கார்க்கி.
இன்று வரை சுமார் 150 பாடல்கள்
எழுதியுள்ளார். இயக்குனர் சங்கரின் எந்திரன் திரைப்படத்திற்கு 2010 ஆம் ஆண்டு இவர்
எழுதிய பாடலான “இரும்பிலே ஓர்
இருதயம் முளைத்ததோ” பாடல் உலகெங்கும் மதன்
கார்க்கியின் புகழை எடுத்துச்சென்றது. வைரமுத்துவின் புதல்வனும்
பாடல்கள் எழுத ஆரம்பித்து விட்டாரா?
என்று பேசும் அளவிற்கு மதன்கார்க்கி
பிரசித்தி பெற்றார். இருந்தும் தனது பாடல்களில் தந்தையின்
சாயல் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி வழியினை
வகுத்து அதிலே தனது வரிகளை
படரவிடுகிறார் மதன்கார்க்கி.
வைரமுத்துவின்
பாடல் வரிகளில் இலக்கியப் பண்புகள் அதிக ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.
இவரின் புதல்வரின் பாடல் வரிகளில் நவீன
உலகை ஆக்கிரமிக்கும் மென்பொருள் வன்பொருட்களின்
செயற்பாட்டு பண்புகள் காணப்படுகின்றது.
மக்கள்
மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்கள்
இவ்வாறு மென்பொருள், வன்பொருட்களின் பண்புகள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இருதரப்புக் காதல், ஒரு தரப்புக்
காதல், காதல் வசப்பட்ட இதயத்தின்
வெளிப்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் தத்ரூபமாக தனது
பொறியியல் அறிவை பயன்படுத்தி பாடல்
வரிகளை தொடுத்துத்தருகிறார்; மதன்கார்க்கி.
மதன்கார்க்கி எழுதிய சில பாடல்கள் பற்றி இங்கே விபரிப்பது பொருத்தமானதாக இருக்கும். துப்பாக்கி திரைப்படத்தில் இளைய தளபதி விஐய்க்கு “கூகுள் கூகுள்; பண்ணிபார்த்தேன்”, “அந்தாட்டிக்கா வெண்பனியிலே” என்ற இரண்டு பாடல்களை எழுதினார் மதன்கார்க்கி. இதில் முதலாவது பாடல் காதலர்களின் வெளிப்பாடாகவும் இரண்டாவது பாடல் காதல் வசப்பட்ட இராணுவ வீரனின் வெளிப்பாடகவும் அமைந்திருக்கிறது.
“கூகுள்
கூகுள்; பண்ணிப்பார்த்தேன்” பாடலில் இணையத்தள மென்பொருட்களின்
பெயர்களை பட்டியலிட்டார் மதன்கார்க்கி.
‘கூகுள் கூகுள்; பண்ணிப்
பார்த்தேன் உலகத்தில, இவன் போல ஒரு
கிறுக்கனும் பிறந்ததில்லை, யாகூ யாகூ பண்ணிப்
பாத்தும் இவனப் போல எந்த
கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை, நான் டேட்டிங் கேட்டா
வோச்ச பாத்து ஓகே சொன்னானே!,
சொப்பிங் கேட்டா ஈபை டொட்
கொம்; கூட்டிப் போனானே!, மூவி கேட்டா யூ-டியூப் போட்டு பாப்கோன்
தந்தானே!” என்று மிக அழகாக
வரிகளை புனைத்திருப்பார்.
இதன் இண்டாவது பாடலான “அந்தாட்டிக்கா வெண்பனியிலே”
என்ற பாடலின் ஒரு இடத்தில்
“அடி பெண்ணே என் மனது
எங்கே ரேடார் விளக்குமா? அடி
என் காதல் ஆழம் என்ன
சோனார் அளக்குமா?” என்று அந்த இராணுவ
வீரனின் காதலினை வன்பொருட்கள் மூலம்
அழகு படுத்தியிருப்பார்.
இது போன்று ‘நண்பன்’ திரைப்படத்தில்
எழுதிய “அஸ்க் லஸ்கா ஏமோ
ஏமோ” என்று தொடங்கும் பாடல்
14 மொழிகளில் காதலை சொல்லும் பாடலாக
அமைந்தது. இதில் ஒரு இடத்தில்
“வைரஸ் இல்லா கணினி உன்
உள்ளம் வெள்ளை” என்று எழுதி
தனது பாணியினை வெளிப்படுத்தியிருப்பார்.
‘கோ’ என்ற திரைப்படத்தில் ஒரு
இளைஞனுக்கு முதலில் மலர்ந்த காதலின்
வெளிப்பாடாக அமைந்த பாடலான “என்னமோ
ஏதோ” என்று ஆரம்பிக்கும் பாடலின்
முழு வரிகளும் புகைப்படக்
கருவியினையும் கலைஞனையும் மனதில் நினைத்து எழுதியதாக
பொது நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்
மதன்கார்க்கி. இதில் “நிழலை திருடும்
மழலை நானோ?” என்ற வரி
ஒரு எடுத்துக்காட்டாகும்.
அண்மையில்
வெளிவந்த கத்தி திரைப்படத்தில் மதன்கார்க்கி
எழுதிய பாடலுக்கு பின்னர் தம்மை தாமே
புகைப்படம் எடுக்கும் முறை தற்போது உலகளவில்
பிரசித்தம் அடைய வைத்த பாடல்
தான் “செல்ஃபி புள்ள” பாடல்.
இதில் மதன்கார்க்கி சமூக வலைத்தளங்களான முகநூல்,
இன்ஸ்ரகிராம் ஆகிய மென்பொருட்களின் பெயர்களையும்,
எடுக்கப்பட்ட புகைப்படங்களினை திருத்தம் செய்ய பயன்படுத்தப்படும் போட்டோசொப்
என்ற மென்பொருளையும் அழகாக பயன்படுத்தியிருப்பார்.
விரைவில்
வெளிவரவிருக்கும் திரைப்படமான தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்
என்ற திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை எழுதிய
மதன்கார்க்கி அதில் வன்பொருட்களின் தொழிற்பாட்டை
மனிதனின் செயற்பாட்டுடன் தொடர்புபடுத்தி மிக நேர்த்தியாக வரிகளை
வரிசைபடுத்தியிருப்பார். அவ்வரிகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாக
இருக்கும். “அலைவரிசை மாற்றவே தொலை இயக்கி
அழுத்தவும்! தலை எழுத்தை மாற்றவே
உன் மூளையை நீ அழுத்தவும்!”
என்ற வரியில் தொலைக்காட்சி பெட்டியின்
‘றிமோட்’ என்ற வன்பொருளை பயன்படுத்தியிருகிறார்.
“வேகத்தை
எடுக்க முடுக்கியை அழுத்து! நியாயத்தை உரைக்க சொற்களை அழுத்து!”
இவ்விடத்தில் வாகனத்தின் ‘அக்ஸ்லேட்டர்’ என்ற வன்பொருளை பயன்படுத்தியுள்ளார்.
“கதவுகள் திறக்க அழைப்பொலி அழுத்து!
கனவுகள் திறக்க உறக்கத்தை அழுத்து!”
என்ற வரியினூடாக ‘கோலிங்பெல்’ என்ற வன்பொருளை பயன்படுத்தியுள்ளார்.
“குறுஞ்செய்தி
அனுப்பவே விசைப்பலகை அழுத்தவும்! பெருஞ்செய்தி எழுதவே உன் ஆயுளை
நீ அழுத்தவும்!” இவ்விடத்தில் ‘கீபோட்’ என்ற வன்பொருளை
பயன்படுத்தியுள்ள மதன்கார்க்கி இதே பாடலில் “பணம்
உடனே வேண்டுமா? தானியங்கி வங்கி சென்று உன்
இரகசியத்தை அழுத்தவும்! காதல் செலுத்த வேண்டுமா?
தானியங்கி இதழ்களின் மேலே முத்தத்தை அழுத்தவும்!”
என்ற வரியில் ஏ.ரி.எம் இயந்திரத்தை உபயோகித்து
உள்ளார் மதன்கார்க்கி.
இவ்வாறு
மதன்கார்க்கி தான் கற்ற பொறியியல்
கற்கை நெறியினை தனது பாடல் வரிகளில்
மிக அழகாக பயன்படுத்தி தற்கால
சந்ததியினரை கவரும் வகையில் சிறந்த
நயப்புடன் பாடல் வரிகளினை வழங்கி
வருகின்றார்.
- சொர்ணகுமார் சொரூபன்
No comments:
Post a Comment