Saturday, February 28, 2015

வெற்றிக்கான போட்டி

உலகக்கிண்ண முதல் சுற்றில் இன்று மோதும் இங்கிலாந்து இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இன்றைய போட்டி மிக முக்கியமானதாகும். இன்றைய போட்டியின் வெற்றிதான் காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கும்

பலம் மிக்க அவுஸ்திரேலியா நியூஸிலாந்து ஆகியவற்ருடனான போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து ஸ்கொட்லாந்தை வென்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.

பலமான நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஆகியவற்றை வென்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது இலங்கை

இங்கிலாந்தும் இலங்கையும் பலமான நாடுகளிடம் தோல்வியடைந்தன. இன்றைய‌ போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த‌ போட்டிகளில் நெருக்க‌டி இன்றி விளையாட‌லாம்.    இன்றைய வெற்றி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றை வெல்வதற்குரிய தற் துணிவைக்கொடுக்கும்.போட்டிக‌ளிலும் க‌ட்டாய‌மாக‌ வெற்றி பெற‌ வேண்டுஇய‌ இக்க‌ட்டான‌ நிலையில் உள்ள‌து இங்கிலாந்து.



இல‌ங்கையும் இன்றைய‌ போட்டியில் க‌ண்டிப்பாக‌ வெற்றி பெற‌ வேண்டும் இன்று தோல்விய‌டைந்தால் அவுள்திரேலியாவுட‌னான‌ போட்டி மிகுந்த‌ நெருக்க‌டியைக்கொடுக்கும். ஸ்கொட்லாந்தை மிக‌ இல‌குவாக‌ இல‌ங்கை வீழ்த்திவிடும் கால் இறுதி வாய்ப்பை உறுதிப்ப‌டுத்தும்  போட்டியில் இங்கிலாந்தும் இல‌ங்கையும் ச‌ந்திக்கின்ற‌ன‌.

No comments: