உலகக்கிண்ண போட்டியைஇணைந்து நடத்தும் நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதும் நாளைய போட்டி பாரபரப்பு மிகுந்ததாக இருக்கும். உலகக்கிண்ணத்தைக் குறி வைத்துள்ள இரண்டு நாடுகளும் முதல் சுற்றில் சந்திக்கின்றன.
இலங்கை,இங்கிலாந்து ஆகிய பலமான நாடுகளையும் பலம் குறைந்த ஸ்கொட்லாந்தையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தி லுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்துடனான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. மழை காரணமாக பங்களாதேஷுடனான போட்டி கைவிடப்பட்டது. புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
துடுப்பாட்டம் பந்து வீச்சு ஆகியவற்றில் ஆக்ரோசம் நிறைந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டியின் முடிவை முன்கூட்டியே கணிக்க இயலாது. நியூஸிலாந்து வெற்றி பெற்றால் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் இலங்கையை பிந்தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் தோல்வியைக்காணாத இரண்டு நாடுகளில் ஒன்று இன்று தோல்வியடையும்.
பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா ஆகியவற்றுடனான போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தி லிருக்கும் இந்தியா வெற்றி பெறும் நம்பிக்கையில் ஐக்கிய அரபுஎமிரேட்ஸை சந்திக்கிறது.சிம்பாப்வே அயர்லாந்து ஆகியவற்றிடம் தோல்வியடைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்நம்பிக்கை இன்றி
களம் இறங்க உள்ளது.ஓட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இந்தியாவுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment