Thursday, February 26, 2015

முன்னேறுவதற்கான போராட்டம்

மேற்கு இந்தியத்தீவுகளும் தென்.ஆபிரிக்காவும் நாளை பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. அயர்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் பாகிஸ்தானையும் சிம்பாப்வேவையும் வென்று நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிடம் தோல்வியடைந்து சொம்பாப்வேயை வென்று இரண்டு புள்ளிகளுடன் தென் ஆபிரிக்கா நான்காவது இடத்தில் உள்ளது.நாளய போட்டியில் வெற்றிபெற்றால் மேற்கு இந்தியத்தீவுகள் முதலிடத்துக்கு முன்னேறும் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்தைப்பிடிக்கும் ஓட்ட விகிதம் அதிகமானால் இரண்டாவது இடத்தைப்பிடிக்கலாம். ஓட்டவிகிதம் மைனஸில் இருப்பதால் இரன்டாவது இடம் சாத்தியமில்லை.

மேற்கு இந்தியத்தீவுகளின் அதிரடி மற்றைய நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவுடனான போட்டி மேற்கு இந்தியத்தீவுகளுக்கு கடுமையானதாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அது ஊதித்தள்ளி விடும் 

வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் தென் ஆபிரிக்கா உள்ளது.  இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற  அயர்லாந்தை கடக்க வேண்டிய து முக்கியமானது. அடுத்து அச்சுறுத்தும் அயர்லாந்தைதும் பதுங்கும் பாகிஸ்தானையும் சந்திக்க வேண்டும் பதுங்கும் பாகிஸ்தான் பாய்ந்து விட்டால் ஆபத்துதான்.ஐக்கிய அரபு எமிரேட்ஸை வெல்வதற்கு எந்ததிட்டமும் தேவை இல்லை.


No comments: