பங்களாதேஷ் இலங்கை ஆகியவற்றுக்கிடையே நாளை நடைபெறும் போட்டி இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியமானது. பங்களாதேஷ் மூன்று புள்ளைகளுடன் மூன்றாவது இடத்திலும் இரண்டு புள்ளிகளுடன் இலங்கை நான்காவது இடத்திலும் உள்ளன.மூன்றாவது இடத்தி லிருந்தால்தான் பாதுகாப்பு இல்லைய்ர்ர்ல் இங்கிலாந்து இடையில் புகுந்து விடும் ஆபத்து உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கை மிகவும் கஷ்டப்பட்டு ஆப்கானிஷ்தானை வென்றது. மழைகாரணமாக அவுஸ்திரேலியாவுடனான போட்டி கைவிடப்பட்டதால் வர்ணபகவானின் அருளால் பங்களாதேஷுக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இலங்கையை வென்றுவிட்டால் அடுத்து இங்கிலாந்துடனும் நியூஸிலாந்துடனும் பங்களாதேஷ் மல்லுக்கட்ட வேண்டும் . ஸ்கொட்லாந்தை வீழ்த்தும் நம்பிக்கை பங்களாதேஷிடம் உள்ளது.
இலங்கையின் நிலை மிக சிக்கலாக உள்ளது. பங்களாதேஷை வென்றாலும் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் அச்சுறுத்தலாக உள்ளன. அடுத்தபோட்டிகள் எல்லாமே சவாலானதுதான். நியூஸிலாந்துடனும் அவுஸ்திராலியாவுடனும் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இலங்கையுடனான போட்டி இங்கிலாந்துக்கு சவாலான தாக இருக்கும் பங்களாதேஷையும் ஆப்கானிஸ்தானையும் வென்றுவிடலாம் என இங்கிலாந்து நம்பிக்கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் எதிரான இன்னொருபோட்டி முக்கியத்துவம் அற்ற போட்டியாகும். உலக்ககிண்ணப்போட்டியில் வெற்றிபெற்ற அணி என்ற பெருமை வெற்றி பெறும் நாட்டுக்கு கிடைக்கும்
No comments:
Post a Comment